• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கமலா ஹாரிஸ்க்கு தமிழரான தன் அம்மாவையும், இட்லியையும் ரொம்ப பிடிக்குமாம்.. மலரும் நினைவுகள்

|

வாஷிங்டன்: கமலா ஹாரிஸ் 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடத் திட்டமிடுவதாக அறிவித்தபோது, பெரும்பாலான தலைப்புச் செய்திகள் அவரை 'ஆப்பிரிக்க-அமெரிக்கர்' என்று அடையாளம் காட்டின. ஆனால். அவர் உண்மையில் இந்திய வம்சாவளி என்பதும் அவருடை சொந்த ஊர் தமிழகத்தின் சென்னை என்பதும் தெரியவந்துள்ளது. இந்திய ஊடகங்கள் இப்போது கமலாவை கொண்டாடி வருகின்றன.

  Kamala Harris சென்னை பெண் America Vice President | Oneindia Tamil

  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன், கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸை 2020ம் ஆண்டு துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார். இதையடுத்து இவர் யார் என்று உலகம் தேடிய போது, சென்னை தாய்க்கும், ஜமைக்காவைச் சேர்ந்த தந்தைக்கும் கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் பிறந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

  54 வயதான கமலா ஹாரிஸின் வாழ்க்கை அசாதாரணமான விஷயங்களால் ஆனது. சான் பிரான்சிஸ்கோவில் மாவட்ட வழக்கறிஞராகவும், கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரர் என இரு பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். அவரது ஆதரவாளர்களால் பெரும்பாலும் 'பெண் பராக் ஒபாமா' என்று அழைக்கப்படுகிறார். புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் திகழ்ந்தார்.

  அரசியல் வாழ்க்கை

  அரசியல் வாழ்க்கை

  கமலா ஹாரிஸ் தனது பல நேர்காணல்களில், தனது இந்திய-அமெரிக்க தாய் ஷியாமலா கோபாலன் ஹாரிஸ் தனது அரசியல் வாழ்க்கையை ஊக்குவித்தாக பாராட்டியுள்ளார். கமலா ஹாரிஸைப் பொறுத்தவரை, அவருடை தாயார் ஒரு உத்வேகமாக இருந்தார் - 'சூப்பர் ஹீரோ'வாக இருந்துள்ளார்.

  பொக்கிஷமாக கருதுகிறேன்

  பொக்கிஷமாக கருதுகிறேன்

  அவரது நினைவுக் குறிப்பில், "இந்த உலகத்திலேயே , நான் ஷியாமலா கோபாலன் ஹாரிஸின் மகள் என்பதைதான் பொக்கிஷமாக கருதுகிறேன். இதுதான் நான் அனைவருக்கும் மிகவும் பிடித்த உண்மை " என்று கூறியுள்ளார். அவர் 19 வயது இந்தியப் பெண்ணான தனது தாயாரின் தைரியத்தை கண்டு பெருமிதப்படுகிறார். அவரது தாயார் ஷியாமலா கோபாலன் , படிப்புக்காக அமெரிக்கா சென்றார். மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை மீறுகிறார். ஷியாமலா மருத்துவ ஆய்வுக்காக அமெரிக்கா சென்று பெர்க்லி பல்கலைக்கழகத்தில் மார்பக புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி படிப்பை முடித்தார். அங்கு ஷியாமலா ஜமைக்காவைச் சேர்ந்த டொனால்ட் ஹாரிஸை சந்தித்து திருமணம் செய்தார். மேற்கண்ட தகவல் கமலாவின் நினைவு குறிப்புகளில் உள்ளது.

  எனக்காக வாழ்ந்தவர்

  எனக்காக வாழ்ந்தவர்

  இந்நிலையில் கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளருக்கான திட்டங்களை அறிவித்த உடனேயே, ஹாரிஸ் தனது தாயுடன் ஒரு குழந்தை பருவப் படத்தை வெளியிட்டார், "இன்று என் அம்மாவைப் பற்றி யோசிக்கிறேன். அவர் புத்திசாலி, கடும் உழைப்பாளி. எனக்காக வாழ்ந்தவர். அவர் இங்கு இப்போது இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் இந்த தருணத்தில் என் தாயாரின் ஆத்மா இன்னும் உயர்ந்த மதிப்புகளுக்காக போராட என்னைத் தூண்டுகிறது. " என்று கூறியுள்ளார்.

  தாயின் அரவணைப்பு

  தாயின் அரவணைப்பு

  தந்தை டொனால்ட் ஹாரிஸ் மற்றும் அவரது தாயார் ஷியாமலா விவகாரத்து வாங்கிக்கொண்டு பிரிந்தபோது, கமலா ஹாரிஸுக்கு 7 வயது தான். இதையடுத்து கமலா ஹாரிஸும் அவரது தங்கை மாயாவையும் அவரது அம்மா ஷியாமலாதான் வளர்த்து ஆளாக்கி உள்ளார். அவரது சகோதரி மாயா ஹிலாரி கிளிண்டனின் வழக்கறிஞராகவும் ஆலோசகராகவும் ஆனார். கமலா ஹாரிஸ்க்கு தனது இந்திய உறவினர்கள மிகவும் பிடிக்குமாம். அவரது இந்தியாவின் இட்லி மிகவும் பிடித்த உணவாம். கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும், கமலா ஹாரிஸும் அவரது சகோதரியும் தமிழ்நாட்டில் உள்ள அவரது தாத்தா, பாட்டி, மாமாக்கள் மற்றும் அத்தைகளை வந்து பார்ப்பார்களாம்.

  தாய் வெளிப்படுத்தி மொழி

  தாய் வெளிப்படுத்தி மொழி

  கமலா ஹாரிஸ் அவரது நினைவுக் குறிப்பில், இப்படி எழுதுகிறார், "எனது தாய், தாத்தா, பாட்டி, அத்தை மற்றும் மாமா ஆகியோர் எங்கள் தெற்காசிய (இந்திய உறவுகளை) வேர்களைப் பற்றி பெருமிதம் கொண்டார்கள்... இந்திய கலாச்சாரத்தைப் பற்றிய வலுவான விழிப்புணர்வுடனும், புகழை பறைசாற்றியும் நாங்கள் வளர்க்கப்பட்டோம். என் என் தாயின் பாசம் அல்லது விரக்தியின் வார்த்தைகள் அனைத்தும் அவளுடைய தாய்மொழியில் (தமிழில்) வெளிவந்தன - இது எனக்கும் பொருத்தமாகவேத் தோன்றுகிறது, ஏனென்றால் அந்த உணர்ச்சிகளின் தூய்மையில், நான் என் தாயுடன் அதிகம் தொடர்புபடுத்துகிறேன். " என்று கூறுகிறார்..

  வைரலாகும் பழைய படம்

  வைரலாகும் பழைய படம்

  கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தா பிரிட்டீஸ் ஆட்சிக்கு எதிரான சுதந்திர இந்தியா இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.. இப்போது கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபர் போட்டியில் களம் இறங்குவதன் மூலம் தனது தாய்வழி பாட்டிக்கு தனது தாய்க்கும் இந்தியாவுக்கும், தாய்வழி பிறந்த மண்ணான தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். கமலா ஹாரிஸ் ஒருமுறை சென்னையில் உள்ள தனது உறவுகள் எடுத்த பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  US deputy president candidate Kamala Harris likes her Tamil mother and Italy very much: she said 'Thinking of my mother today. She was smart, fierce, and my first campaign staffer — and I dearly wish she was here with us for this moment. Her spirit still drives me to fight for our values".
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X