வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ட்ரம்ப் ஒரு தோல்வியின் அடையாளம்: கமலா ஹாரிசின் அதிரடி பிரசாரம் ஆரம்பம்

டிரம்ப்பை மோசமாக கமலா ஹாரீஸ் விமர்சித்திருக்கிறார்

Google Oneindia Tamil News

வில்லிங்டன், அமெரிக்கா: ஒரு அதிபராக டொனால்ட் ட்ரம்ப் முழுத் தோல்வி அடைந்துவிட்டார். ட்ரம்பின் இந்தத் தோல்வி அவரை மட்டுமல்ல, இந்த தேசத்தையும் மக்களையும் தோல்வியில் தள்ளிவிட்டது என்று கடும் குற்றச்சாட்டை முன் வைத்து தனது பிரசாரத்தை துவக்கியுள்ளார் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபருக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ்.

Recommended Video

    Trump-ஐ விளாசிய Joe Biden-Kamala Harris | First Campaign | Oneindia Tamil

    அமெரிக்க தேர்தலை உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனிப்பது வழக்கம்... இந்த முறை கமலா ஹாரிஸ் காரணமாக அமெரிக்க தேர்தல்மீது இந்திய மக்களின் பார்வை சற்றே விசாலமாக விரிந்திருக்கிறது.. அவரை பற்றின விவாதங்கள் சோஷியல் மீடியாவில் தொடங்கிவிட்டன.

    "இந்தியாவின் முகம்" என்று ஒரு சாராரும், "இந்திய அடையாளங்களை அவர் எப்போதோ துறந்து விட்டார்"என்று மற்றொரு சாராரும் விவாத்தை கையில் எடுத்துள்ளனர்.. இப்படி எத்தனையோ காரணங்களால் கமலா ஹாரிஸ் என்ற பெயர் அமெரிக்க அரசியலில் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாகியிருக்கிறது.

    பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவ மட்டுமே அனுமதி கேட்கிறோம் ஊர்வலத்திற்கு இல்லை - எல்.முருகன்பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவ மட்டுமே அனுமதி கேட்கிறோம் ஊர்வலத்திற்கு இல்லை - எல்.முருகன்

     துணை அதிபர்

    துணை அதிபர்

    தற்போது, துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் புதிய வரலாறுக்கு உரியவராகி விட்டார் கமலா ஹாரிஸ். வெள்ளையர் அல்லாத முதல் துணை அதிபர் வேட்பாளர் என்பதே அந்த சாதனையாகும். அதன் பின்னர் கமலா ஹாரிஸ் தனது உரையை நிகழ்த்தியபோதுதான், டிரம்ப்பை உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்.

     குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    ஒரு தலைவராக, ஒரு அதிபராக டிரம்ப் "தோற்றுப் போய் விட்டார்".. இதுதான் கமலா வைத்த அதிரடி குற்றச்சாட்டு. "மக்களுக்கு ஏற்பட்ட எல்லா துயரத்தையும் தனக்கான அரசியல் ஆயுதமாக மாற்றி விட்டார் டிரம்ப். அமெரிக்கர்கள் இதை உணர வேண்டும். ஜோ பைடனை அதிபராக தேர்ந்தெடுக்க வேண்டும். அவரால் மட்டுமே மக்களை மீண்டும் ஒருங்கிணைக்க முடியும்" என்றும் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

     ஜனநாயக கட்சி

    ஜனநாயக கட்சி

    ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தேர்வு வில்லிங்டன் நகரில் ஜனநாயக் கட்சியினர் மத்தியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கமலா ஹாரிஸ் பேசுகையில், "டிரம்ப்பின் தோல்வியால் மக்களும், அவர்களது வாழ்க்கையும் மிகக் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி விட்டன. நாம் மிகப் பெரிய பாதிப்பில் இருக்கிறோம். இதிலிருந்து வெளிவர, மீண்டு வர ஜோ பைடன் அதிபராக வேண்டும்" என்று கூறினார் கமலா ஹாரிஸ்.

    பொய்கள்

    பொய்கள்

    "டிரம்ப் பொய்களில் புரள்பவர்... கற்பனை உலகில் வாழ்கிறார்.... நாட்டில் கொரோனா தாக்கம், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட தீர்க்கப்படவேண்டிய எத்தனையோ பிரச்னைகள் உள்ளன... இதை எல்லாம் விட்டுவிட்டு தேவையில்லாமல் என்னை பற்றி விமர்சித்து கொண்டிருக்கிறார்... இது அவருடைய மட்டமான அரசியல் போக்கை வெளிக்காட்டுகிறது" என்று கமலா ஏற்கனவே விமர்சனங்களை அடுக்கிய நிலையில், தற்போதைய பேச்சு நிச்சயம் டிரம்புக்கு பெருத்த அவமானத்தையே உண்டுபண்ணும்.

    இந்தியர்

    இந்தியர்

    கலிபோர்னியாவைச் சேர்ந்த செனட் உறுப்பினரான கமலா ஹாரிஸ், கருப்பர் இனத்தைச் சேர்ந்த முதல் துணை அதிபர் வேட்பாளர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். இவரது தந்தை ஜமைக்கர், தாயார் இந்தியர். கமலா ஹாரிஸ் மணந்திருப்பது ஒரு யூதரை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு கூட்டு இனக் கலவையாக வலம் வரும் கமலா ஹாரிஸின் பெயரை ஜோ பைடன் பரிந்துரைத்தது முதலே அவர் அமெரிக்காவில் வெகு பிரபலமாகி விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

     தோத்து போயிட்டீங்க

    தோத்து போயிட்டீங்க

    தற்போது டிரம்ப்பை "நீங்க தோத்துப் போயிட்டீங்க" என்று அதிரடியாக அவர் அடித்துச் சொல்லியிருப்பது இன்னும் அவரது பிரபலத்தை உயர்த்தி விட்டது. இது பைடனுக்குமே கூட லாபமாக அமையும் என்றும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். உண்மையில் பைடனை மிஞ்சும் அளவுக்கு கமலாவின் பிரபலம் அங்கு அதிகரித்து வருவதாகவும் கூட சொல்லப்படுகிறது.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    கமலாவிடம் மேலும் சில சாதனைகளும் கூட உண்டு... கலிபோர்னியாவின் முதல் கருப்பர் இனத்தைச் சேர்ந்த அட்டர்னி ஜெனரல் என்பது அதில் ஒன்று. அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற சாதனையும் அவருக்கு உண்டு. அதேபோல செனட் சபைக்குக் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்கு ஆசியர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு... இத்தனை சிறப்புக்களையும் தன்னகத்தே உள்ளடக்கினாலும், தொடர்ந்து கமலாவின் தடம் அமெரிக்க மண்ணில் அடுத்தடுத்து பதிக்கப்படுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

    English summary
    kamala harris making history as vp pick condemns trumps leadership failure
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X