வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துர்க்கை ஆக கமலா.. டிரம்பை வதம் செய்வதாக போட்டோ.. மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் துர்க்கை தெய்வமாக மாறி, அதிபர் டிரம்பை வதம் செய்வது போன்று கிராபிக்ஸ் புகைப்படம் வெளியானது. இதை தனது டுவிட்டர் பக்கத்தில் கமலா ஹாரிஸ்ன் மருமகள் மீனா ஹாரிஸ் ஷேர் செய்திருந்தார். இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மீனா ஹாரிஸ் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது, ஆளும் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தின் சென்னையை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் (வயது 55) போட்டியிடுகிறார். இவரது மருமகள் மீனா ஹாரிஸ் (வயது 35). வழக்கறிஞராக பணியாற்றுகிறார்.

டிரம்பை வதம் செய்கிறார்

டிரம்பை வதம் செய்கிறார்

இவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில், கமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக சித்தரித்து படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த படத்தில், கமலா ஹாரிஸ் கடவுள் துர்க்கையாக காட்சி அளிக்கிறார். மகிசாசுரன் ஆக அதிபர் டிரம்ப் காட்டப்பட்டு இருக்கிறார். அவரை கமலா ஹாரிஸ் குத்தி கொல்வது போன்று உள்ளது. இதேபோல் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன், துர்க்கையின் வாகனம் ஆன சிங்கம் போன்று காட்டப்பட்டு உள்ளது.

வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது

வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது

இந்த பதிவு வெளியிடப்பட்டு சற்று நேரத்தில் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது. எனினும் அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.. இந்து அமெரிக்க அறக்கட்டளையின் (எச்.ஏ.எஃப்) சுஹாக் ஏ சுக்லா, "பெண் கடவுளான அன்னை துர்க்கையின் முகவடிவம் மிகைப்படுத்தப்பட்டு இருப்பது, உலகம் முழுவதும் உள்ள பல இந்து மக்களை ஆழ்ந்த வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது " இவ்வாறு கூறினார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

மன்னிப்பு கேட்க வேண்டும்

இந்த படம் மீனா ஹாரிஸால் உருவாக்கப்படவில்லை. இதேபோல் கமலா ஹாரிசின் பிரச்சாரக்குழுவும் உருவாக்கவில்லை. எனினும் அவர் படத்தை பகிர்ந்ததற்காக இந்து அமெரிக்க அரசியல் செயற்குழு, அவதூறுக்கு எதிரான அமெரிக்க இந்துக்களுக்கான அமைப்பு உள்ளிட்டவையும் மீனா ஹாரிஸ்க்கு கண்டனம் தெரிவித்து உள்ளன.
கமலா ஹாரிஸை துர்காவாக சித்தரிக்கும் படம், மத சமூகத்தை புண்படுத்தும் மற்றும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமெரிக்க இந்துக்களுக்கு எதிரான அவதூறுக்கு எதிரான கன்வீனர் அஜய் ஷா கூறினார். இந்து அமைப்புகள் அனைத்தும் மீனா ஹாரிஸ் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

கமலா வாழ்த்து

கமலா வாழ்த்து

கடந்த வார இறுதியில், நவராத்திரியை முன்னிட்டு ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் அல்லவை அழிந்து நல்லவை வெற்றி பெறட்டும் என்று அமெரிக்காவில் வாழும் இந்து சமூகத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்கள். நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கமலா ஹாரிஸ் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், நம்முடைய இந்து அமெரிக்க நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மற்றும் நவராத்திரியை கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான விழாவாக அமைய வாழ்த்துகிறேன். என்று கூறியிருந்தார்.

English summary
Kamala Harris' niece Meena Harris has been slammed for tweeting a picture which depicted the Democratic presidential candidate as goddess Durga. Hindu groups in the US have demanded an apology from Meena Harris.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X