வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜோ பிடனுக்கு மகிழ்ச்சி பொங்க வாழ்த்து சொல்லும் கமலா ஹாரிஸ் வீடியோ- செம வைரல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடனுக்கு துணை அதிபராகி இருக்கும் கமலா ஹாரிஸ் வாழ்த்து சொல்லும் வீடியோ வைரலாகி ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நவம்பர் 3-ல் நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வந்தது.

அமெரிக்க வரலாற்றிலேயே வயதான அதிபர்.. பாக்.கிற்குள் ஒசாமாவை தாக்க எதிர்த்தவர்.. யார் இந்த ஜோ பிடன்?அமெரிக்க வரலாற்றிலேயே வயதான அதிபர்.. பாக்.கிற்குள் ஒசாமாவை தாக்க எதிர்த்தவர்.. யார் இந்த ஜோ பிடன்?

தற்போது 293 எலக்ட்டோரல் வாக்குகளைப் பெற்று ஜோ பிடன் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் தோல்வியைத் தழுவி இருக்கிறார்.

Kamala Harris releases video of phone call with Joe Biden

அமெரிக்காவின் புதிய துணை அதிபராகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ். அமெரிக்காவின் முதல் தமிழ் துணை அதிபர், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், அமெரிக்காவின் முதல் கறுப்பர் இன துணை அதிபர் என பல பெருமைக்குரியவராகிறார் கமலா ஹாரிஸ்.

கமலா ஹாரிஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், ஜோ பிடனுக்கு தொலைபேசியில் மகிழ்ச்சியின் உச்சத்தில் வாழ்த்து சொல்லும் வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார். நாம் சாதித்துவிட்டோம்.. அமெரிக்காவின் அதிபராகிறீர்கள் என கமலா ஹாரீஸ் வாழ்த்து சொல்லும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

English summary
Kamala Harris has shared a video of her calling Joe Biden with news of the US presidency Poll result.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X