வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உன்னை பார்க்க வேண்டும் என்றால் போதும்.. அடுத்த நாளே சென்னை வந்துடுவார்.. கமலா குறித்து சித்தி தகவல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மிகவும் கனிவானவர், அன்பானவர் என அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் குறித்து அவரது சித்தி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Kamala Harris சென்னை பெண் America Vice President | Oneindia Tamil

    அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்கள்.

    இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் நான் அதிபராக வெற்றி பெற்றால் இந்திய தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸை துணை அதிபராக நியமிப்பேன் என தெரிவித்தார். இதனால் அமெரிக்கா வாழ் இந்தியர்களும், தமிழர்களும், கருப்பின மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த அமெரிக்காவே அவரோடதுனு டிரம்புக்கு நெனப்பு.. ஆனா ஜோ பிடனை பாருங்க.. விளாசிய கமலா ஹாரீஸ் இந்த அமெரிக்காவே அவரோடதுனு டிரம்புக்கு நெனப்பு.. ஆனா ஜோ பிடனை பாருங்க.. விளாசிய கமலா ஹாரீஸ்

    துணை அதிபர் வேட்பாளர்

    துணை அதிபர் வேட்பாளர்

    இந்த நிலையில் இதுகுறித்து கமலா ஹாரீஸின் சித்தி டாக்டர் சரளா கோபாலன் கூறுகையில், கமலா ஹாரீஸ் துணை அதிபர் வேட்பாளராக நியமித்தது குறித்து அமெரிக்காவில் இருந்த நண்பர் ஒருவர் போனில் தகவல் தெரிவித்தார். உடனே அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து விட்டோம். கமலா மிகவும் நல்லவர், கனிவானவர், அன்பானவர்.

    வேட்பாளர்

    வேட்பாளர்

    நான் உன்னை பார்க்க வேண்டும் என கமலாவுக்கு மெசேஜ் அனுப்பினால் போதும் அடுத்த நாளே இந்தியாவுக்கு வந்துவிடுவார். அனைவரையும் நன்றாக பார்த்துக் கொள்வார். அதனால்தான் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இன்னும் அவருடன் பேசவில்லை. வேட்பாளராக அறிவித்ததால் அவர் மிகவும் பிஸியாக இருப்பார் என்றார் அவரது சித்தி.

    அமைச்சர் பதவி

    அமைச்சர் பதவி

    கடந்த 2009-ஆம் ஆண்டு கமலா ஹாரீஸ் அளித்த பேட்டியில் நமது இந்திய கலாச்சாரம் குறித்து எனது ஷியாமளா கோபாலன் கற்றுக் கொடுத்துள்ளார். நாங்கள் அவ்வப்போது இந்தியாவுக்கு சென்று வருவோம். எனது தாய்க்கு பிறகு என் வாழ்வில் செல்வாக்குள்ளவர்கள் யார் என்றால் எனது தாத்தா பிவி கோபாலன்தான், அவர் அமெரிக்காவில் அமைச்சர் பதவியை வகித்தவர்.

    பெசன்ட் நகர்

    பெசன்ட் நகர்

    தாத்தா பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அவர் சென்னையில் உள்ள பெசன்ட் நகருக்கு வந்து விட்டார். நான் விடுமுறையின் போது இங்கு வந்தால் அவருடன் கடற்கையில் வாக்கிங் செல்வேன். ஓய்வு பெற்ற நண்பர்களுடன் அவர் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை வைத்துள்ளார். அப்போது அவர்கள் அரசியல் குறித்தும் ஊழலை எப்படி ஒழிப்பது என்பது குறித்து பேசுவார்கள் என கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.

    English summary
    US Senator Kamala Harris's maternal aunt says that she is ver kind, attachable, if i need to see her, then she will be here the next day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X