வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த அமெரிக்காவே அவரோடதுனு டிரம்புக்கு நெனப்பு.. ஆனா ஜோ பிடனை பாருங்க.. விளாசிய கமலா ஹாரீஸ்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இந்த நாடே அவருக்கு சொந்தம் என நினைக்கிறார். ஆனால் இந்த நாடு மக்களுக்கு சொந்தம் என ஜோ பிடனுக்கு தெரியும் என கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Trump-ஐ விளாசிய Joe Biden-Kamala Harris | First Campaign | Oneindia Tamil

    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இந்த நாடே அவருக்கு சொந்தம் என நினைக்கிறார். ஆனால் இந்த நாடு மக்களுக்கு சொந்தம் என ஜோ பிடனுக்கு தெரியும்.

    Kamala Harris says that Trump thinks this country belongs to him

    நீங்கள் (மக்கள்) இல்லாமல் எதுவும் செய்யமுடியாது. உங்கள் வாக்குகளை ஜோ பிடனுக்கு அளிக்க நீங்கள் முன்வருகிறீர்களா? எங்களுடன் அணி திரளுங்கள் என தெரிவித்துள்ளார் கமலா.

    இதுபோல் அவரது மற்றொரு ட்வீட்டில், அமெரிக்க மக்களை ஒன்றுபடுத்த ஜோ பிடனால் முடியும். ஏனெனில் அவர் தனது வாழ்நாளை நமக்காக போராடி செலவிட்டுள்ளார். நமது சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒரு அமெரிக்காவை அவரால் கட்டமைக்க முடியும்.

    Kamala Harris says that Trump thinks this country belongs to him

    அவரது கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இணைவதை நான் கவுரமாக கருதுகிறேன். அவரை நம் படை தளபதியாக மாற்ற (அதிபர்) நாம் செய்ய வேண்டியதை செய்வோம் என கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.

    எந்த பக்கம் திரும்பினாலும்.. அந்த ஒரு பெயர்தான்.. நாடே உச்சரிக்கும் ஒருவர்..யார் இந்த பினோத்? #Binodஎந்த பக்கம் திரும்பினாலும்.. அந்த ஒரு பெயர்தான்.. நாடே உச்சரிக்கும் ஒருவர்..யார் இந்த பினோத்? #Binod

    இந்திய தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸை தான் அதிபராக வெற்றி பெற்றால் துணை அதிபராக நியமிப்பேன் என ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் உறுதியளித்துள்ளார்.

    Kamala Harris says that Trump thinks this country belongs to him

    துணை அதிபராகும் முதல் கருப்பின பெண் என்பதால் அமெரிக்காவில் இந்த தருணத்தை மக்கள் கொரோனாவுக்கு மத்தியிலும் கொண்டாடி வருகிறார்கள்.

    English summary
    US Vice President nominee Kamala Harris says that Donald Trump thinks this country belongs to him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X