வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 பைபிள்.. "பக்கத்து வீட்டு அம்மா".. பழசை மறக்காத கமலா ஹாரிஸ்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பழசை மறக்காதவர் தான் என்பதை கமலா ஹாரிஸ் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். இன்று துணை அதிபராக அவர் பதவியேற்றபோது 2 பைபிள்களை அவர் பயன்படுத்தினார்.

Recommended Video

    கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா... கண்டு களித்த மன்னார்குடி மக்கள்: டிவி முன்பு அமர்ந்து ஆரவாரம்!

    ஒரு பைபிள், அவர் அம்மாவாக கருதி பாசம் காட்டிய ரெஜினா ஷெல்டன் என்பவருக்குச் சொந்தமான பைபிளாகும். ரெஜினா ஷெல்டன் பைபிளை வைத்து உறுதிமொழி எடுக்க என்ன காரணம்..?

    அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நீங்கள் ஒரு சுவாரஸ்யமான பின்னணிக் கதையை கேட்டாக வேண்டும்.

    ஊதா நிற ஆடையில் ஜொலிக்கும் கமலா ஹாரிஸ்.. பின்னணியில் செம காரணம்.. வியக்கும் அமெரிக்கா! ஊதா நிற ஆடையில் ஜொலிக்கும் கமலா ஹாரிஸ்.. பின்னணியில் செம காரணம்.. வியக்கும் அமெரிக்கா!

    பக்கத்து வீட்டு அம்மா

    பக்கத்து வீட்டு அம்மா

    கமலா ஹாரிஸ் சிறுமியாக இருந்தபோது அவரது வீட்டிலிருந்து 2 வீடு தள்ளி வசித்து வந்தவர்தான் ரெஜினா ஷெல்டன். கமலாவின் தாயார் ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளர். எனவே பணி நேரம், வீடு திரும்புவது எல்லாம் எப்போது என்றே தெரியாது. இந்த மாதிரியான சமயத்தில் பள்ளிக் கூடம் முடிந்ததும் நேராக ரெஜினா வீட்டுக்குத்தான் கமலாவும், அவரது சகோதரி மாயாவும் செல்வார்கள்.

    பாசம் காட்டிய இன்னொரு தாய்

    பாசம் காட்டிய இன்னொரு தாய்

    அம்மா திரும்பி வரும் வரை அவர்களுக்கு ரெஜினாதான் அம்மாவாக இருப்பார். பசியாற சாப்பாடு போடுவது, கதை சொல்வது, பள்ளிக் கூட கதைகளைக் கேட்பது என்று ரெஜினா ஒரு தாயாக மாறி இரு குழந்தைகளையும் அப்படி பாசத்தோடு பார்த்துக் கொள்வாராம்.

    என் 2வது தாய்

    என் 2வது தாய்

    இதை பலமுறை சொல்லி மகிழ்ந்துள்ள கமலா, ரெஜினாவை தனது 2வது தாய் என்றே பூரிப்புடன் சொல்லி மகிழ்வார். அந்த 2வது தாயின் பைபிளை வைத்துத்தான் இன்று தனது துணை அதிபர் பதவியேற்பு விழாவில் உறுதிமொழி எடுத்தார். இது தனது 2வது தாய்க்கு செலுத்தும் நன்றிக் கடனாகவும், கடமையாகவும் கருதுகிறார் கமலா.

    கமலா தரும் கவுரவம்

    கமலா தரும் கவுரவம்

    தனது உயர்வில் தாயாருக்கு என்ன பங்கு இருந்ததோ அதே அளவிலான பங்கு ரெஜினாவுக்கும் உண்டு என்று பெருமையுடன் கூறுபவர் கமலா. கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக முன்பு பதவியேற்றபோதும் கூட ரெஜினாவின் பைபிளை வைத்துத்தான் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதேபோல செனட் உறுப்பினராக வந்தபோதும் இதையேதான் பயன்படுத்தினார்.

    கூடவே இருப்பார்

    கூடவே இருப்பார்

    "நான் எங்கு சென்றாலும் ரெஜினாவையும் என்னுடனேயே அழைத்துச் செல்கிறேன்" என்று 2019ம் ஆண்டு எழுதிய ஒரு கட்டுரையில் கூறியிருந்தார் கமலா ஹாரிஸ் என்பது நினைவிருக்கலாம். முதல் அமெரிக்க கருப்பர் இன துணை அதிபராக பதவியேற்கும் கமலா ஹாரிஸ், கருப்பர் இனத்தைச் சேர்ந்த ரெஜினாவுக்கு இப்படி ஒரு மரியாதையும் கெளரவமும் தருவது கருப்பர் இனத்தவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    2வது பைபிள் நீதிபதியுடையது

    2வது பைபிள் நீதிபதியுடையது

    கமலா ஹாரிஸ் இன்று பயன்படுத்திய 2வது பைபிள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி துர்குட் மார்ஷல் என்பவரின் பைபிளாகும். இவர் மறைந்த சிவில் உரிமைப் போராளி ஆவார். இவரை தனது ஹீரோவாக பலமுறை கூறியுள்ளார் கமலா என்பது நினைவிருக்கலாம். கமலா ஹாரிஸின் குணாதிசயம் அனைவரும் அறிந்ததே.. அந்த வகையில் அவர் 2 பைபிள்களை பயன்படுத்துவதில் ஆச்சரியம் இல்லைதான்.

    English summary
    Newly elected vice president of the US Kamala Harris will carry 2 bibles with her during the Inaugration.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X