• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சாதனை படைத்த கமலா ஹாரிஸ்.. எவ்வளவு 'பெரிய' குடும்பம்.. அதிசயித்து பார்க்கும் அமெரிக்கா!

|

வாஷிங்டன்: கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கும்போது, ​​அவர் பல 'முதல்' சாதனைகளை படைக்க உள்ளார்.

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், முதல் கருப்பினப் பெண், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் என பல சாதனைகள் அவருக்கு சொந்தமாகப் போகின்றன.

இது பலருக்கும் தெரிந்த தகவல். ஆனால் தெரியாத தகவல் என்றால், கமலா ஹாரிஸின் குடும்பம் பற்றியதுதான். ஹாரிஸின் குடும்பம் இப்போதே பதவியேற்பு விழாவுக்கு முழு வீச்சில் தயாராக உள்ளது.

கமலா ஹாரிஸ் குடும்பம்

கமலா ஹாரிஸ் குடும்பம்

அவரது சகோதரி மகள் மீனா ஹாரிஸ், "துணை அதிபர் ஆன்டி" என்ற டி-ஷர்ட்டுடன் சுற்றி வருகிறார். கமலா ஹாரிஸ் கணவரின் முதல் மனைவி கெர்ஸ்டினின், மகள், நியூயார்க் உள்ளார். கலை பயிலும் மாணவி அவர். பெயர் எலா எம்ஹாஃப். "உலகின் தலை சிறந்த சித்தி", கமலா ஹாரிஸ்தான் என்று எலா எப்போதுமே புகழாரம் சூட்டுபவர். அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரத்யேக ஆடையை தேர்ந்தெடுத்து வைத்துள்ளாராம்.

வளர்ப்பு குழந்தைகள்

வளர்ப்பு குழந்தைகள்

கமலா ஹாரிஸ் வளர்ப்புக் குழந்தைகளின் தாயான கெர்ஸ்டின் எம்ஹாஃப் கமலா ஹாரிஸ் பற்றி ஒரு சுவாரசிய தகவல் சொல்கிறார். "ஆம், ஹாரிஸும் அவரது கணவரின் முன்னாள் மனைவி கெர்ஸ்டினும் இப்போதும் சிறந்த தோழிகளாக இருக்கிறார்கள்." என்கிறார் அவர். எனவே கெர்ஸ்டினும், பதவியேற்பு விழாவில் பங்கேற்கப்போகிறாராம்.

கமலா ஹாரிஸ் கணவர்

கமலா ஹாரிஸ் கணவர்

1992ம் ஆண்டு, கமலா ஹாரிஸின் கணவர் டக் எம்ஹாஃப், கெர்ஸ்டினை மணந்தார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் விவாகரத்து செய்தனர் என்பது நினைவுகூறத் தக்கதாகும். மேலே சொன்ன எல்லோரும் கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளனர். கண்டிப்பாக, கணவர் டக் எம்ஹாஃப்பை இந்த நேரத்தில் மறந்துவிட முடியாது. கமலா ஹாரிஸ் வெற்றியில், அணில்போல இருந்து உதவியவர் அவர்தான்.

முதல் சாதனை

முதல் சாதனை

டக் எம்ஹாஃப், நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் பிறந்தவர். சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். தன் மனைவியின் தேர்தல் பிரசாரத்துக்கு நேரத்தைச் செலவிடுவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தனது நிறுவனத்திலிருந்து விடுமுறை எடுத்து தீயாக சுழன்றவர். வீட்டிலும் கமலாவுக்கு ஆதரவாக இருந்தவர் எம்ஹாஃப். கமலா துணை அதிபராக பதவியேற்றதுமே, அமெரிக்காவின், `இரண்டாவது மனிதர் (second gentleman)'என்ற பெருமையை பெறப்போகிறவர் இவர். ஏனெனில் இதுவரை 'இரண்டாவது பெண்' என்ற வார்த்தையை மட்டுமே அமெரிக்கா அறிந்திருந்தது. முதல் முறையாக பெண் ஒருவர் துணை அதிபராவதால் அவர் கணவர், 'இரண்டாவது மனிதர்' என்ற அடைமொழிக்குள் அடைக்கலமாக உள்ளார்.

கமலா தாய்

கமலா தாய்

கமலா தாய் ஷியாமளா கோபாலன் இந்தியர். தந்தை ஜமைக்கா நாட்டவர். எனவே ஹாரிஸ் கிறிஸ்தவ மற்றும் இந்து மத நடைமுறைகளுடன் வளர்க்கப்பட்டார், அதே நேரத்தில் அவரது கணவர் வெள்ளை இனத்தைச் சேந்தவராகும். ஹாரிஸ் திருமணம் செய்தபோது வயது 40. திருமணத்தின் சராசரி வயதை விட இது அதிகம்தான்.

முதல் கணவர் குழந்தைகள்

முதல் கணவர் குழந்தைகள்

ஹாரிசின் கணவர் எம்ஹாஃப்புக்கு அவரது முந்தைய திருமணம் மூலம் 2 குழந்தைகள் உள்ளன. ஹாரிஸுக்கு குழந்தைகள் இல்லை. அமெரிக்காவில் இது சாதரணம்தான். ஏனெனில், குழந்தையில்லா தம்பதிகள் எண்ணிக்கை சமீப காலங்களில், அமெரிக்காவில், ரொம்பவே அதிகரித்துள்ளது. எனவே, தனது கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளை தனது குழந்தைகளாக நினைத்து அன்புகாட்டி வருகிறார்.

பெரிய குடும்பம்

பெரிய குடும்பம்

ஜனநாயக கட்சி கமலாவை துணை அதிபர் வேட்பாளராக முன்மொழிந்தபோது, தனது தாயை குறிப்பிட்டு ஏற்புரையாற்றியிருந்தார். அந்த அளவுக்கு தாய்க்கு முக்கியத்துவம் கொடுத்தவர். இளம் வயதிலேயே ஷியாமளா, அமெரிக்கா குடி பெயர்ந்தார். கமலாவின் சகோதரி பெயர் மாயா. 17 வயதாக இருந்தபோது, அவர் தாய்மையடைந்தார். அவரது மகள் பெயர் மீனா. எனது பாட்டி மற்றும் எனது அம்மாவின் சகோதரிதான் எனக்கு, இன்னொரு தாய் போல என்று மீனா கூறுவது வழக்கம். அவருக்கு இப்போது வயது 36. இவரும் பதவியேற்பு விழாவிற்கு தயாராகும் முக்கிய பிரமுகரில் ஒருவர்.

 
 
 
English summary
When Kamala Harris is sworn in as vice president, she will represent many firsts: First woman vice president. First Black woman. First woman of Indian descent. But there is another milestone that will be on display: that of her family.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X