வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தனது மாமா கொலை.. ட்ரம்ப்பிடம் பகிர்ந்த கிம்... அமெரிக்க செய்தியாளர் புத்தகத்தில் ரகசியம்!!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: எவ்வாறு தனது மாமா கொல்லப்பட்டார் என்ற மர்மத்தை வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக அமெரிக்க செய்தியாளர் பாப் வுட்வேர்ட் தனது ''ரேஜ்'' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க செய்தியாளராக இருப்பவர் பாப் வுட்வேர்ட். இவர் ''ரேஜ்'' என்ற புத்தகம் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்து கொண்டதாக சில தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

Kim Jong-un shared the horrific murder of his uncle with Donald Trump

தனது மாமாவை எவ்வாறு கொன்றார் என்ற விஷயத்தை வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தனக்கு ட்ரம்ப்பிடம் நேரடி சந்திப்பு நடத்தியபோது கிடைத்ததாக பாப் தெரிவித்துள்ளார்.

இத்துடன் வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு தயங்குவதாக அமெரிக்க புலனாய்வு தலைவர் எச்சரித்துள்ளார். மேலும், வடகொரியா தலைவரை ட்ரம்ப் அணுகுவது நல்ல பயன் அளிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இந்த விஷயத்தில் நம்பிக்கையை விடாமல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே ஒரு சின்னப் புன்னகை.. அது போதுமே.. அன்பு சூழ் உலகுக்கு!ஒரே ஒரு சின்னப் புன்னகை.. அது போதுமே.. அன்பு சூழ் உலகுக்கு!

கிம் ஜாங் உன்னை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சிஐஏவுக்கு எந்த ஐடியாவும் இல்லை. கிம் ஜாங்கை நான் சந்தித்தேன். பெரிய அளவில் டீல் முடிந்து இருக்கிறது. இரண்டு நாள் சந்திப்பில் நான் பெரிதாக எதையும் இழக்கவில்லை'' என்று ட்ரம்ப் கூறி இருந்ததாக பாப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது புத்தகத்தில், ''நமது சந்திப்பு வரலாற்று திரைப்படத்தின் காட்சியை நினைவூட்டுகிறது. மீண்டும் ட்ரம்ப்பை சந்திக்க விரும்புகிறேன் என்று கிம் தெரிவித்து இருப்பதையும் பதிவிட்டுள்ளார்.

மேலும் ட்ரம்ப்புக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில், ''உங்களைப் போன்ற மேன்மை பொருந்திய சக்தி வாய்ந்த நாட்டுத் தலைவர்களுடன் நல்ல உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறேன். அழகான இடத்தில் உங்களது கரத்தைப் பிடித்தது வரலாற்றில் ஒரு தருணம், உலகம் முழுவதும் இதை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தனர். அந்த நாளின் கவுரவத்தை மீண்டும் பெறுவேன் என்று நம்புகிறேன்'' என்று கிம் தெரிவித்து இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை 'எக்சலென்சி' என்று கிம் குறிப்பிட்டு இருந்தது கவுரவமாக இருந்தது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கிம் முன்பு சிரித்தே இருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். என்னிடம்தான் முதன் முதலில் அவர் சிரித்து இருக்க வேண்டும் என்று பாப்பிடம் நகைச்சுவையாக ட்ரம்ப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்கர்களிடம் கூறியதற்கும் மேலாக மிகவும் மோசமானதாக இருக்கும் என்று தான் உணர்ந்தே இருந்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பதற்றம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அமெரிக்கர்களிடம் அந்த நோயின் பாதிப்பை கூறவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

English summary
Kim Jong-un shared the horrific murder of his uncle with Donald Trump
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X