வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிடன் பதவியேற்பு நாள்; அமெரிக்கர்களுக்கு சமாதானமான நாளாகும்.. பாப் இசை பாடகர் லேடி காகா சொல்கிறார்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பிடனின் பதவியேற்பு நாள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் சமாதான நாளாக இருக்கும் என்று பிரபல பாப் இசை பாடகர் லேடி காகா கூறியுள்ளார்.

ஒரு நாடு என்ற வகையில் நமது எதிர்கால மகிழ்ச்சியைக் கனவு காணும் நல்ல நாள் இது என்றும் லேடி காகா தெரிவித்து உள்ளார்.

Lady Gaga says Bidens inauguration day will be a day of peace for all Americans

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அபார வெற்றி பெற்றார். அவர் அதிபராகவும், இந்திய வம்சாவளி தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் இன்று பதவியேற்க உள்ளனர். அதிபர் பதவியேற்புக்கான கோலாகல விழா இந்திய நேரப்பபடி இன்று இரவு 10 முதல் நடக்கிறது.

ஜோ பிடன் பதவியேற்பு விழாவில் 34 வயதான பிரபல பாப் இசை பாடகர் லேடி காகா, இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இந்த நிலையில் பிடனின் பதவியேற்பு நாள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் சமாதான நாளாக இருக்கும் என்று லேடி காகா கூறியுள்ளார்.இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:- ஜோ பிடனின் பதவியேற்பு நாள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் சமாதான, அமைதியான நாளாக இருக்கும் என்று நம்புகிறேன். இதற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

இது அன்பிற்கான ஒரு நாள்; வெறுப்பிற்கான நாள் அல்ல. ஏற்றுக்கொள்வதற்கான ஒரு நாள்; பயத்திற்கான நாள் அல்ல. ஒரு நாடு என்ற வகையில் நமது எதிர்கால மகிழ்ச்சியைக் கனவு காணும் நல்ல நாள். அந்த கனவு வன்முறையற்ற ஒரு கனவு, நமது ஆன்மாக்களுக்கு பாதுகாப்பை வழங்கும் ஒரு கனவு என்று லேடி காகா கூறியுள்ளார்.

அண்மையில் அமெரிக்க நாடளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். இதை மனதில் வைத்தே பாப் இசை பாடகர் லேடி காகா இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Popular pop singer Lady Gaga has said that Biden's inauguration day will be a day of peace for all Americans
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X