வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

127 நாடுகளிலிருந்து 71,000 அமெரிக்கர்கள் மீட்பு.. இந்தியா, பாக்.லிருந்து கோரிக்கைகள் குவிகின்றனவாம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: 127 நாடுகளில் இருந்த 71 ஆயிரம் அமெரிக்கர்களை சொந்த நாட்டுக்கு அமெரிக்கா அழைத்துக் கொண்டுள்ளது. இது போல் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள தங்களை மீட்க வேண்டும் என ஏராளமான கோரிக்கை எழுவதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Recommended Video

    மெல்ல மெல்ல மீண்டு வரும் நியூயார்க்

    இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்கன் கூறுகையில் 127 நாடுகளில் உள்ள 71, 538 அமெரிக்கர்கள் தங்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த ஜனவரி 29-ஆம் தேதி முதல் 750 விமானங்கள் மூலம் இவர்கள் மீட்கப்பட்டனர்.

    Largest repatriation request from India and Pakistan

    அது போல் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்கர்கள் தங்களை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 63 விமானங்களில் 4000 பேரை மீட்க திட்டமிட்டுள்ளோம்.

    அடுத்தடுத்த வாரங்களில் அனைவரையும் மீட்டுவிடுவோம். இரு வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து மீட்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் எங்களிடம் இருந்தது. இந்தியாவிலிருந்து எத்தனை பேரை தாயகம் மீட்க வேண்டும் என்பது குறித்த பட்டியல் தெளிவாக இல்லை. பெரும்பாலானோர் கடைசி நேரத்தில் வேண்டாம் என சொல்லிவிடுகிறார்கள்.

    "அலைகள் ஓய்வதில்லை.. பாறைகளும் உடைவதில்லை" பச்சை பட்டுடுத்தி.. எம்புட்டு நாளாச்சுக்கா குரலை கேட்டு!

    உலகம் முழுவதும் அமெரிக்க குடிமக்கள் உள்ள கப்பல்களை கண்காணித்து வருகிறோம். கப்பலில் உள்ளவர்களை அந்தந்த நாடுகளில் இறக்கிவிடுவதற்கான அனுமதியை விரைந்து வழங்க நாங்கள் வெளிநாட்டு அரசு, கப்பல் நிறுவனங்களிடம் கேட்டுள்ளோம் என்றார்.

    English summary
    Largest repatriation request from India and Pakistan amid US got back 71 K americans from 127 countries through 750 flights.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X