வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெள்ளை மாளிகைக்கு கொடிய விஷயம் தடவிய கடிதம்.. கனடாவிலிருந்து அனுப்பியது யார்?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உளவுத் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ரைசின் எனும் விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே வழக்கமான சோதனையின் போது அந்த கடிதத்தில் விஷம் இருப்பது தெரியவந்தது.

பாஜகவின் பாதுகாப்பு வளையத்திற்குள் முதல்வர்... விவசாயிகளிடம் மன்னிப்பு கோருக - ஸ்டாலின் பாய்ச்சல்பாஜகவின் பாதுகாப்பு வளையத்திற்குள் முதல்வர்... விவசாயிகளிடம் மன்னிப்பு கோருக - ஸ்டாலின் பாய்ச்சல்

டிரம்ப் நிர்வாகம்

டிரம்ப் நிர்வாகம்

இந்த கடிதம் கனடாவில் இருந்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் டிரம்பை குறி வைத்து கடிதம் அனுப்பப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து டிரம்ப் நிர்வாகம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

சிறை தண்டனை

சிறை தண்டனை

வெள்ளை மாளிகைக்கு இது போன்று நச்சு தடவிய கடிதங்கள் அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் பராக் ஓபாமாவிற்கு நஞ்சுப் பொருள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதம் அனுப்பிய நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நச்சு பொருள்

நச்சு பொருள்

இதுகுறித்து உளவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போதைய நிலையில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. எதற்காக இந்த கடிதம் அனுப்பப்பட்டது என தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இத்துடன் இன்னும் சில கடிதங்களும் நச்சு தடவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரிசின்

ரிசின்

மொத்தம் எத்தனை நச்சு தடவிய கடிதங்கள் இதுவரை வந்துள்ளன என்பது குறித்து தெரியவில்லை. பல கடிதங்கள் சிறைகளின் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதங்களில் ஒன்றே ஒன்று மட்டும் அரசியல் பிரமுகரின் பெயருக்கு வந்துள்ளது. இந்த ரிசின் எனும் விஷம் அதிகம் விஷத்தன்மையானது.

மயக்கம்

மயக்கம்

இது அதை தெரியாமல் உட்கொண்டு விட்டால் வாந்தி, மயக்கம், வயிறு, குடல் பகுதியில் ரத்தக் கசிவு உள்ளிட்டவை ஏற்படும். அந்த மருந்தின் வீரியத்திற்கு ஏற்ப மண்ணீரல், ஈரல், சிறுநீரகம் ஆகியற்றை பாதிப்பதோடு, சில நேரங்களில் மரணத்தையும் விளைவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Letter sent to White house which has deadly poisin Ricin, officials says. FDI investigates about the letter's sender.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X