• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

லண்டன் ராட்டினம் இருக்குல்ல.. அத்தாத்தண்டி சைஸ்ல ஒரு விண்கல்.. பூமியை நோக்கி வருதாம்!

|

வாஷிங்டன்: லண்டன் ஐ ராட்டினத்தை விட மிகப் பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருப்பதாகவும், இம்மாதம் அது பூமிக்கு மிக அருகில் வர இருப்பதாகவும் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்து பீதியை கிளப்பியுள்ளது நாசா.

2020ம் ஆண்டு எப்போது தான் முடியுமோ என உலக மக்கள் கலக்கத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் கொரோனா, ஊரடங்கு, மழை, வெள்ளம், பூமிக்கு மிக அருகில் வரும் ராட்சத விண்கற்கள் என கத்தி முனையில் அமர்ந்திருப்பது மாதிரியே இந்த வருடம் கடந்து கொண்டிருப்பது தான். 2021 பிறந்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும், மோசமான நிகழ்வுகள் இந்தாண்டுக்குள் முடிந்து விட வேண்டும், அடுத்த ஆண்டாவது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஆண்டாக இருக்க வேண்டும் என்பது தான் எல்லோரது பிரார்த்தனையும்.

சரி விசயத்திற்கு வருவோம். ஏற்கனவே கொரோனோ பாராபட்சம் பார்க்காமல் எல்லா நாடுகளையும் பதம் பார்த்து வருகிறது. முதல் முதலில் கொரோனா தாக்குதலுக்கு ஆளான சீனாகூட அதில் இருந்து மீண்டு வந்து விட்டது. ஆனால் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா என மற்ற உலக நாடுகள் எல்லாம் கொரோனா அரக்கனிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர்.

குறி வைத்தது.. அந்தமான் தீவிற்கு போர் கப்பல்களை அனுப்பிய இந்தியா.. தீவிர போர் பயிற்சி.. சீனா ஷாக்!

விண்கல் பீதி

விண்கல் பீதி

கொரோனா ஒருபுறம் இப்படி பாடாய் படுத்துகிறது என்றால், மறுபுறம் இயற்கையும் மனிதனுக்கு எதிராய் சதி செய்து வருகிறது. பெரிய பெரிய ராட்சத விண்கற்கள் அவ்வப்போது பூமிக்கு மிக அருகில் வந்து கண்ணில் மரணபயத்தைக் காட்டி வருகிறது. இந்த வரிசையில் புதிதாக ஒரு விண்கல் ஒன்று தற்போது இணைந்துள்ளது.

நாசா எச்சரிக்கை

நாசா எச்சரிக்கை

இம்மாதம் ( ஜூலை) 24ம் தேதி பூமிக்கு மிக அருகில் வர இருக்கும் இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்திருப்பதாக சூசகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா. பூமியை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருக்கும் இந்த விண்கல்லானது லண்டன் ஐ (London Eye) விட ஒன்றரை மடங்கு பெரியது என நாசா தெரிவித்துள்ளது.

லண்டன் ஐ சைஸ்

லண்டன் ஐ சைஸ்

"லண்டன் ஐ" என்பது இங்கிலாந்து நாட்டில் லண்டனில் உள்ள தேம்சு நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரும் இராட்டினம் ஆகும். ஐரோப்பாவிலேயே மிக பிரபலமான சுற்றுலா மையமான இது சுமார் 443 அடி உயரம் கொண்டது. இந்த ராட்டினத்தை விட மேற்கூறிய விண்கல் 50 சதவீதம் பெரியது ஆகும்.

பூமிக்கு மிக அருகில்

பூமிக்கு மிக அருகில்

நாசா இந்த விண்கல்லுக்கு 2020ND என்று பெயரிட்டுள்ளது. இம்மாதம் 24ம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும் இந்த விண்கல் பூமியின் 0.034 வானியல் அலகு (AU ) வரம்பிற்குள் வரும். அதாவது விநாடிக்கு 13.5 கிலோமீட்டர் அல்லது மணிக்கு 48,000 கிலோமீட்டர் வேகத்தில் இந்த விண்கல் பயணித்து வருகிறது.

தூரம்

தூரம்

இந்த பிரம்மாண்டமான விண்கல் வானியல் முடியின் அகல அடிப்படையில் நமது கிரகத்திலிருந்து 5,086,328 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வானியல் அலகு 150 மில்லியன் கிலோமீட்டருக்கு சமம், அதாவது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் ஆகும்.

 
 
 
English summary
According to NASA, a very large asteroid is rushing towards Earth at a very fast speed. Massive Asteroid is larger than the famous London Eye. On July 24, a massive 170-meter-long rock will come in 0.034 astronomical units of our planet (AU).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X