வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1 கோடி பரிசு அடித்த லாட்டரி சீட்டு..தெரியாமல் குப்பையில் வீசிய பெண்..அய்யய்யோ என பதறிய போது ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் குப்பையில் வீசிய லாட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி விழுந்ததால், இன்ப அதிர்ச்சி அடைந்த பெண் ஒருவர், ஒருவழியாக போராடி லாட்டரி சீட்டை மீட்டு கோடீஸ்வரராகியிருக்கிறார்.

திண்ணையில் கிடந்தவருக்கு திடுக்கென அடித்தது யோகம் என்ற ஒரு பேச்சு வழக்கு உண்டு. அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ லாட்டரி சீட்டில் பரிசுத்தொகை அடிப்பவர்களுக்கு 100 சதவீதம் பொருந்தும்.

லாட்டரி சீட்டுக்கள் வாங்கியே பணத்தை கோட்டை விட்ட பலர் இருக்கின்றனர். இதனால், கண்ணை மூடிக்கொண்டு அதிர்ஷ்டத்தை நம்புவது முட்டாள்தனம்தான்.

தகாத உறவை கண்டித்த மனைவி.. முதலைக் கண்ணீர் வடித்து நாடகமாடிய கணவர்! கதிகலங்கிய கள்ளக்குறிச்சி! தகாத உறவை கண்டித்த மனைவி.. முதலைக் கண்ணீர் வடித்து நாடகமாடிய கணவர்! கதிகலங்கிய கள்ளக்குறிச்சி!

மயிரிழையில்..

மயிரிழையில்..

இருந்தாலும் ஒருசிலருக்கு திடீரென கோடிக்கணக்கில் பணம் கொட்டும் போது, ஆசை யாரைத்தான் விட்டது என்பது போல அனைவருக்கும் லாட்டரி சீட்டு மீது ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது என்று சொல்லலாம். அமெரிக்காவில் சில மாகாணங்களில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனையில் உள்ளது. அந்த வகையில் வடக்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த ஜாக்குலின் லே (வயது 60) என்ற பெண், மயிரிழையில் தனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை தவற விட்டு இருப்பார்.

ஒரு கோடி ரூபாய்

ஒரு கோடி ரூபாய்

ஆனால், அதிர்ஷ்ட தேவதை அவரைத்தான் சுற்றி வந்து இருக்கிறது என்பது போல ஒரு வழியாக அதே லாட்டரியை தேடிபிடித்து ஒரு கோடி ரூபாய் பரிசை தட்டிச்சென்றுவிட்டார். இதனால், மகிழ்ச்சிக்கடலில் மிதக்கும் ஜாக்குலின் லே, தனக்கு எப்படி லாட்டரியில் பரிசு அடித்தது என்ற விவரத்தை சொல்லியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு:-

தெரியாமல் தூக்கி வீசிவிட்டேன்

தெரியாமல் தூக்கி வீசிவிட்டேன்

வடக்கு கரோலினா எஜுகேஷன் லாட்டரி நிறுவனத்தின் லாட்டரி சீட்டுக்களை நான் வாங்கியிருந்தேன். 5 டாலர் மதிப்புள்ள அந்த லாட்டரி டிக்கெட்டுக்கள் ஸ்க்ராட்ச் (சுரண்டல்) லாட்டரியாகும். 5 லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி சுரண்டி பார்த்து விட்டு பரிசு விழுந்தது தெரியாமல் தூக்கி வீசிவிட்டேன். அதன்பிறகுதான் எனக்கு பரிசு விழுந்தது தெரியவந்தது. உடனடியாக திரும்பி தேடிச்சென்று ஒருவழியாக அந்த சீட்டை கண்டுபிடித்துவிட்டேன்.

மகிழ்ச்சிக்கடலில்..

மகிழ்ச்சிக்கடலில்..

அதன்பிறகுதான் பெரும் நிம்மதி அடைந்தேன். இந்த டிக்கெட் மூலம் எனக்கு 2,00,000 டாலர்( இந்திய மதிப்பில் சுமார் (ரூ.1.64 கோடி) பரிசுத்தொகை கிடைத்தது. நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். சத்தமாக கத்த வேண்டும் என்று நினைக்க தோன்றுகிறது. பரிசுத்தொகை கிடைத்ததும் எனது குடும்பத்தினரிடம் தான் தெரிவித்தேன். எனது மகளிடம் சொல்லும் போது, உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள். இதுபோல எனக்கு முன்பு பரிசு கிடைத்தது இல்லை என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல உணர்வதாகவும் கூறியிருக்கிறார்.

English summary
A woman who was pleasantly surprised to find Rs 1 crore for a lottery ticket thrown in the trash in the state of North Carolina, USA, has become a millionaire by fighting to recover the lottery ticket.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X