வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது.. விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்- மைக்ரோசாப்ட்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கணினியில் பொழுது போக்கிற்காக விளையாடப்படும் எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது என மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

90-களில் பிறந்த அல்லது படித்தவர்களுக்கு பெயின்ட் பிரஷை மறக்க முடியாது. கணினி புரோகிராம்களை விட இதை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இந்த சாப்ட்வேரை தெரிந்து வைத்துக் கொண்டு அன்று நம் காலத்து மாணவர்கள் கொடுத்த பில்டப் இருக்கே அப்பப்பா....

M.S.Paint will not be removed, says Microsoft

எம்எஸ் பெயின்ட் பிரஷ் கற்றுக் கொண்டிருந்தால் கணினியே அத்துப்படி என்ற அளவுக்கு அப்போதைய டிரென்ட் இருந்தது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படம் வரைந்தும், வண்ணங்கள் தீட்டியும் மகிழ்ந்ததை யாராலும் மறக்க முடியாது.

இந்த பெயின்ட் பிரஷை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ரத்து செய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது. இதற்கு அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தன் முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது அந்த நிறுவனம்.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில் விண்டோஸ் 10-இன் புதிய அப்டேட்டில் பெயின்ட் பிரஷ் சேர்க்கப்படும். இதை நீக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

English summary
Microsoft company says that MS Paint Brush will not removed and it will be added in Windows 10.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X