வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜான் சீனா கின்னஸ் சாதனை.. உடல்நலம் பாதித்த 650 குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி அசத்தல்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உடல் நலம் பாதிக்கப்பட்ட 2 வயது முதல் 18 வயது நிரம்பியவர்களின் 650 பேரின் ஆசைகளை நிறைவேற்றி அசத்திய மல்யுத்த வீரர் ஜான் சீனா உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் WWE எனும் மல்யுத்தப்போட்டிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த மல்யுத்த போட்டி என்பது 80s, 90s கிட்ஸ்களுக்கும் இன்றும் கூட ‛பேவரைட்டாக' தான் உள்ளது.

இந்நிலையில் தான் WWE மல்யுத்த போட்டியில் சிறப்பான செயல்பாட்டால் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் தான் ஜான் சீனா.

அசத்தும் இந்தியா.. உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக விரைவில் மாறும்.. ஆனந்த் மஹிந்திரா கணிப்பு அசத்தும் இந்தியா.. உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக விரைவில் மாறும்.. ஆனந்த் மஹிந்திரா கணிப்பு

16 முறை சாம்பியன்

16 முறை சாம்பியன்

ஜான் சீனா தனது தனித்துவமான திறமையால் எதிராளியை துவம்சம் செய்வார். குறிப்பாக உடல் பருமன் மிக்க பிக்சோ, மார்க் ெஹன்றி உள்ளிட்ட வீரர்களை இவர் தனது தோளில் தூக்கி மேடையில் பொத்தென வீசுவதை பார்த்து கைத்தட்டாத ரசிகர்கள் இருக்கவே முடியாது. WWWவில் 16 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்தார். அதன்பிறகு ஹாலிவுட் சினிமாவில் கால்பதித்து நடிகராக மாறினார்.

மேக் ஏ விஷ் பவுண்டேஷன்

மேக் ஏ விஷ் பவுண்டேஷன்

இந்நிலையில் தான் ஜான் சீனா மல்யுத்த போட்டிகளுக்கு மத்தியிலும் கூட உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். கடந்த 2022ம் ஆண்டு முதல் ‛ மேக்-ஏ-விஷ்-பவுண்டேஷன்' மூலம் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றி வருகிறார். மேக்-ஏ-விஷ் பவுண்டேஷன் என்பது இலாப நோக்கமற்ற ஒரு அமைப்பாகும். இது ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது முதல் 18 வயது வரை நிரம்பிய குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றி வருகிறது.

650 குழந்தைகளின் ஆசைகள்

650 குழந்தைகளின் ஆசைகள்

அதாவது குழந்தைகள் ஆசையாக கேட்கும் பொருட்கள், அவர்கள் சந்திக்க விரும்பும் நபர்களை சந்திக்க ஏற்பாடு செய்தல் உள்பட ஏராளமானவற்றை இந்த அமைப்பு மூலம் ஜான் சீனா செய்து வருகிறார். தற்போது 20 ஆண்டுகளாக ‛மேக் ஏ விஷ் பவுண்டேஷன்' எனும் அமைப்புடன் சேர்ந்து ஜான் சீனா அந்த பணியை மேற்கொண்டு வருகிறார். அதன்படி இதுவரை அவர் மொத்தம் 650 குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றி உள்ளார். இந்த அமைப்பின் வழியாக இதுவரை ஒருவர் கூட 200 குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றாத நிலையில் தான் ஜான் சீனா இந்த சாதனையை செய்தார்.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

இதன்மூலம் அவர் உலக சாதனை படைத்துள்ளார். ‛மேக் ஏ விஷ் பவுண்டேஷன்' மூலம் 650க்கும் அதிகமான குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றிய நபர் என்ற வகையில் ஜான் சீனா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது, கின்னஸ் உலக சாதனை படைத்த ஜான் சீனாவுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சொன்னபடி நடக்கும் ஜான் சீனா

சொன்னபடி நடக்கும் ஜான் சீனா

முன்னதாக ஜான்சீனா ஒரு பேட்டியில், ‛‛ ‛மே ஏ விஷ் பவுண்டேஷன்' அமைப்பிடம் உங்களுக்கு எனது உதவி தேவைப்பட்டால் கூறுங்கள். நிச்சயமாக செய்வேன். அந்த சமயத்தில் நான் எந்த பணியை செய்தாலும் கூட அதை விட்டு உங்களுக்கு உதவுவேன். ஏனென்றால் அது தான் சிறந்த விஷயம். இதற்கு நான் எப்போதும் சிறந்த பங்களிப்பு செய்ய விரும்புகிறேன்'' என தெரிவித்து இருந்தார். தற்போது அவர் கூறியபடியே மொத்தம் 650 பேரின் ஆசைகளை நிறைவேற்றி உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
WWE wrestler John Cena made a world record by fulfilling the wishes of 650 people from 2 years to 18 years of age and was listed in the Guinness Book of World Records.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X