• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பீருக்கு காசு கேட்ட மாணவர்.. கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த மக்கள்.. அதிரடி டிவிஸ்ட்!

|
  பீருக்கு காசு கேட்ட மாணவர்.. கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த மக்கள்.. அதிரடி டிவிஸ்ட்!-வீடியோ

  வாஷிங்டன்: விளையாட்டு சில சமயங்களில் வினையாகும். ஆனால் அந்த வினை பலருக்கு நன்மை தருவதாக இருந்து விட்டால் சந்தோசம் தான். அப்படித்தான் அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் விளையாட்டிற்காக செய்தது, இன்று பல குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவி இருக்கிறது.

  அமெரிக்காவைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கார்சன் கிங். சமீபத்தில் இவர் அயோவாவில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்ற காலேஜ் கேம் டே' என்ற புட்பால்' விளையாட்டு நிகழ்ச்சியைக் காண நண்பர்களுடன் சென்றிருந்தார். பிரபல விளையாட்டு சேனலில் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சி என்பதால் அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உண்டு.

  நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது, கார்சன் தன் கையில் ஒரு பதாகையுடன் நின்றிருந்ததும் பதிவானது. அந்த பதாகையில், "புஷ் லைட் பீர் வாங்க வேண்டும்" என்று எழுதி, அதற்காக மக்கள் பணம் கொடுத்து உதவ வேண்டும் என தன் இணையப் பணப் பரிவர்த்தனை ஐடியையும் சேர்த்து எழுதியிருந்தார் கார்சன்.

   பீர் வாங்க பணம்

  பீர் வாங்க பணம்

  கார்சன் குறும்புத்தனமாக செய்திருந்த இந்தக் காட்சிகள் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. கார்சனின் இந்த செயலால் கவரப்பட்ட மக்கள், உடனடியாக அவர் பீர் வாங்க பணம் அனுப்பத் தொடங்கினர். இதனால் நிகழ்ச்சி ஒளிபரப்பான சில நிமிடங்களிலேயே, இவரது அக்கவுன்டுக்குப் பணம் வரத் தொடங்கியிருக்கிறது.

  மகிழ்ச்சி

  மகிழ்ச்சி

  அடுத்த அரைமணி நேரத்தில் அவரது கணக்குக்கு 400 டாலர் வரை நன்கொடை வந்து விட்டது. நேரம் ஆக ஆக நன்கொடையின் அளவு உயரத் தொடங்கியது. நன்கொடைகள் 1,000 டாலரைத் தாண்டவும் ஆச்சர்யமடைந்த கார்சன், தனது மகிழ்ச்சியை டிவிட்டரில் வெளிப்படுத்தினார்.

   மருத்துவமனைக்கு நன்கொடை

  மருத்துவமனைக்கு நன்கொடை

  அதில், அனைவரும் அனுப்பிய பணத்தில், ஒரு கேஸ் பீர் வாங்க தனக்குத் தேவையான 15 டாலர் பணத்தைத் தவிர மற்ற பணத்தையெல்லாம் அப்பகுதியின் சிறுவர் மருத்துவமனைக்கு நன்கொடையாக அளிப்பதாக கார்சன் அறிவித்தார். பீர் வாங்கவே பணம் கொடுத்தவர்கள், மருத்துவமனைக்கு என்றால் தராமல் விட்டு விடுவார்களா? மேலும் கார்சன் அக்கவுண்ட்டில் பணம் குவியத் தொடங்கியது.

   தொகை அதிகரிக்கும்

  தொகை அதிகரிக்கும்

  67,000 டாலருக்கு மேல் கிங்கிற்கு நன்கொடைகள் வந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இம்மாத இறுதி வரை நன்கொடைகளை அனுப்பலாம் என கார்சன் அறிவித்துள்ளதால், இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   பீர் நிறுவனம் அதிரடி

  பீர் நிறுவனம் அதிரடி

  இது ஒருபுறம் இருக்க, கார்சன் பற்றிய தகவல் இணையத்தில் டிரெண்டிங்காக, புஷ் லைட் பீர் நிறுவன கவனத்திற்கும் அது சென்றது. அதனைத் தொடர்ந்து, கார்சன் நன்கொடை அளிக்கும் அதே தொகையை தாங்களும் அந்தச் சிறுவர் மருத்துவமனைக்கு அளிப்பதாக புஷ் லைட் பீர் நிறுவனம் அறிவித்தது.

  டிவீட்

  டிவீட்

  கார்சன் குறிப்பிட்ட வெண்மொ பணப் பரிவர்த்தனை நிறுவனமும் இதே போல், கார்சன் அளிக்கும் தொகையை சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அளிக்க இருப்பதாக டிவீட் செய்துள்ளது. அந்த டிவீட்டில், ‘நாங்கள் நிறைய நல்ல கதைகளைக் கேட்டிருக்கிறோம். ஆனால், இதுவே எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமானது' எனத் தெரிவித்துள்ளது.

   கார்சன் மகிழ்ச்சி

  கார்சன் மகிழ்ச்சி

  கார்சன் விளையாட்டாக செய்த செயல் மூலம் தற்போது அந்த சிறுவர் மருத்துவமனைக்கு இரண்டு லட்ச டாலருக்கும் மேல் நன்கொடை கிடைக்க இருக்கிறது. இந்திய மதிப்பில் இது கிட்டத்தட்ட ஒரு கோடியே 42 லட்ச ரூபாய் ஆகும். ‘இப்படியெல்லாம் நடக்கும் என தான் நினைக்கவில்லை' மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் கார்சன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  A man whose plea for beer money appeared on national television earned more than a million dollars in donations. But instead of spending the money on suds, he's donating the funds to charity.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more