வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எலும்புக்கூடுக்கு டிரஸ் போட்டு.. அபராதத்தில் இருந்து தப்பிக்க தாத்தா செய்த தில்லாலங்கடி.!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் தனி வழித்தடத்தில் அபராதம் இன்றி பயணிக்க, எலும்புக்கூடுடன் முதியவர் ஒருவர் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஒரு சில மாகாணங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, நெடுஞ்சாலைகளில் தனி வழித்தடம் இருக்கும். இதில், ஒருவருக்கு மேல் பயணிக்கும் கார்கள் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால் சமயங்களில் நெரிசலான சாலைகளில் பயணிக்க விரும்பாத சிலர், விரைவில் செல்ல வேண்டும் என இந்த வழித்தடத்தை பயன்படுத்துவது வழக்கம்.

man dresses up skeleton to drive in hov lane

அப்படி விதிகளை மீறி தனி வழித்தடத்தில் பயணிப்பவர்களை போக்குவரத்து போலீசார் பிடித்து அபராதம் விதிப்பதும் அங்கு அடிக்கடி நடக்கும் சம்பவம் தான். எனவே அபராதத்தில் இருந்து தப்பிக்க சிலர் தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபடுவது உண்டு.

சமீபத்தில் அப்படித்தான் தில்லாலங்கடி வேலை செய்த முதியவர் ஒருவர் போலீசாரிடம் வசமாக சிக்கி, அபராதம் கட்டி இருக்கிறார்.

என்னை கேக்காம ஏன் பெத்தீங்க.. அப்பா, அம்மா மேல கேஸ் போட போறாராம்.. இப்படியும் ஒரு மகன் என்னை கேக்காம ஏன் பெத்தீங்க.. அப்பா, அம்மா மேல கேஸ் போட போறாராம்.. இப்படியும் ஒரு மகன்

அரிசோனா மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட காரை ஓட்டி வந்த 62 வயது முதியவர், தன் காரில் எலும்புக்கூடு ஒன்றை அமர வைத்து அதற்கு தொப்பி அணிவித்து தனி வழித்தடத்தில் பயணித்துள்ளார்.

ஆனால் அவரது காரில் இருந்த எலும்புக்கூடைப் போலீசார் கண்டுபிடித்து விட்டனர். உடனடியாக அந்த காரை நிறுத்தி அபராதம் வசூலித்து விட்டனர். அதோடு இனி மேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

English summary
In Arizona a man has tried to disguise a toy skeleton as a passenger in a bid to drive along a car-sharing lane, according to authorities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X