வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாசா களமிறக்கும் ’டார்ட்’ விண்கலம்! இதற்காகவா? அதிகாலையில் உங்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன் : விண்வெளியில் இருந்து நாம் வாழும் பூமிக்கு அருகே வரும் விண்கல் ஒன்றினை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வடிவமைத்துள்ள சிறப்பு விண்கலம் ஒன்று தற்கொலை படை போல மாறி மோதி பாதையை மாற்ற இருக்கும் நிகழ்வை நாசா நேரடியாக ஒளிபரப்ப இருக்கும் நிலையில் உலகம் முழுவதும் இந்த நேரடி ஒளிபரப்பினை காண பலரும் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

நம் வாழும் இந்த பூமி பல அதிசயங்களையும் அசாதாரண விஷயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பறந்து பிரிந்து இருக்கும் இந்த பிரபஞ்சத்தின் சிறு புள்ளியான பூமியில் இவ்வளவு அதிசயங்கள் என்றால் பிரபஞ்சத்தில் எவ்வளவு இருக்கும்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த விண்வெளியில் என்ற ஆர்வத்தின் காரணமாக மனிதன் நூற்றாண்டு காலமாக ஆர்வத்துடன் விண்வெளி சோதனைகளை மேற்கொண்டு வருகிறான். அமெரிக்கா தொடங்கி இந்தியா வரை உலக நாடுகள் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டார்.. அக்.9 முதல் 11 ஆம் தேதி வரை 3 நாட்கள் கொங்கு ஈஸ்வரன் நடைபயணம்! கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டார்.. அக்.9 முதல் 11 ஆம் தேதி வரை 3 நாட்கள் கொங்கு ஈஸ்வரன் நடைபயணம்!

நாசா

நாசா

அமெரிக்காவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ உள்ளிட்ட உலகில் உள்ள பல நாடுகள் விண்வெளி ஆய்வில் தீவிரம் கவனம் செலுத்தி வருகின்றன, சர்வதேச விண்வெளி ஆய்வு மையமும் விண்வெளியில் மிதந்து ஆய்வு நடத்தி வருகிறது, குறிப்பாக உலக அளவில் விண்வெளி ஆய்வில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் மிகப்பெரிய அளவிலான பங்களிப்பை வழங்கி வருகிறது. நிலவில் கால் வைத்தது செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பியது என பல அரிய சாதனைகளை சாதித்து காட்டியிருக்கும் நாசா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணுக்கு அனுப்பி ஆய்வு நடத்தி வருகிறது.

 விண்கல்

விண்கல்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பிய பல புகைப்படங்கள் விண்வெளி ஆய்வில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் விண்வெளியில் பயணிக்கும் பல விண்கற்கள் பூமியை நோக்கி பயணிப்பதும் அதனால் பூமிக்கு ஆபத்து வருவதாகவும் கடந்த பல நூற்றாண்டுகளாகவே வதந்திகள் உலாவுகின்றன. இதற்கான விடை தேடு முயற்சியை நாசா தொடங்கியிருக்கிறது. பூமியை விண்கற்கள் தாக்குவதற்கான அபாயம் இல்லை என கூறினாலும் இனிவரும் காலங்களில் இது போன்ற நிலைகள் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

டார்ட் மிஷன்

டார்ட் மிஷன்

அந்த வகையில் அப்படி ஒரு நாள் பூமிக்கு ஆபத்து ஏற்பட்டால் அப்போது என்ன செய்யலாம் என நினைத்த நாசா தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றில் இறங்கி இருக்கிறது. அப்படியான முன் யோசனையில் நாசாவின் மூளையில் உதித்த திட்டம்தான் டார்ட் மிஷன் (DART). டாட் மிஷன் என்பது டபுள் ஆஸ்ராய்டு ரீடைரக்டட் டெஸ்ட். அதாவது பூமியை நோக்கி வரும் விண்கற்களை திசை மாற்றி விடுவது இந்த திட்டத்தின் அடிப்படையில் நாசா தயாரித்துள்ள டார்ட் விண்கலம் ஒன்று, இந்திய நேரப்படி இன்று காலை டைமோர்போஸ் (dimorphos) என்ற விண்கல் ஒன்றினை மோதி தாக்க உள்ளது.

அதிகாலையில் அதிசயம்

அதிகாலையில் அதிசயம்

தாக்குதல் என்றால் அந்த விண் கல்லினை முற்றிலுமாக மோதி தகர்ப்பது கிடையாது அது பயணிக்கும் பாதையை பூமியிலிருந்து சற்று விலக்கி வைப்பது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. நாசா திட்டமிட்டபடி இந்த விண்கல்லை நாசாவின் விண்கலம் தாக்கி அதன் பாதையை மாற்றி விட்டால் எதிர்காலத்தில் பூமியை நோக்கி வரும் விண்கற்கள் எனும் ஆபத்தை குறைப்பதற்கு இது ஒரு பேரு உதவியாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள் தற்போதைய நிலையில் சோதனை முயற்சியாக இந்த டாட் மிஷன் அமெரிக்க நேரப்படி செப்டம்பர் 26 ஆம் தேதி இரவு 7.14 மணிக்கு நடைபெற இருக்கிறது.

நாசா லைவ்

நாசா லைவ்

இந்திய நேரப்படி பார்க்கும்போது செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணி முதல் நான்கு 40 மணிக்குள் இந்த சோதனை முயற்சி தாக்குதல் திட்டமானது நடைபெற இருக்கிறது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த நேரடி வீடியோவை காண்பதற்கு நாசா தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஒளிபரப்பை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது இதை எடுத்து பலரும் இந்த அறிய அற்புத நிகழ்வை காண்பதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

திட்டம் என்ன?

திட்டம் என்ன?

தற்போது நாசா டார்கெட் செய்திருக்கும் டிமோர்பாஸ் விண்கல் , 2500 அடி அகலம் கொண்ட டிடிமோஸ் என்ற சிறுகோள் ஒன்றை சுற்றி வருகிறது. இதனை நாசாவின் டார்ட் சுமார் வினாடுக்கு 15,000 மைல் வேகத்தில் மோதி அதன் சுற்றுப்பாதையை சிறிது திசை திருப்ப உள்ளது. நம்ம ஊரில் இருக்கும் சிறிய காரின் அளவே இருக்கும் டார்ட் விண்கலம் டிமோர்பாஸ்-ல் மோதி வெடித்துவிடும். அதன்பின், அந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் லிசியாகியூப் எனப்படும் சிறிய செயற்கைக்கோள் இந்த மோதலின் போது ஏற்படும் நிகழ்வுகளை நமக்கு காட்டவுள்ளது.

English summary
Many people around the world are eagerly waiting to watch the live broadcast of a special spacecraft designed by the American space exploration agency NASA that is going to collide and change its path like a suicide squad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X