வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாரத்தான் போட்டியை லைவ் செய்த பெண் நிருபர்.. "அந்த" இடத்தில் தட்டி சென்ற அமைச்சர்.. வீடியோ வைரல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மாரத்தான் ஓட்டம் குறித்த செய்தியை நேரலையில் வழங்கிக் கொண்டிருந்த பெண் செய்தியாளரை போட்டியாளரும் ஜார்ஜியா நாட்டின் அமைச்சருமான டாமி கால்வே, அவரது பின்புறத்தில் தட்டிவிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. இதையடுத்து அந்த அமைச்சர் மன்னிப்பு கேட்டார்.

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை சிஎன்என் நிறுவனத்தின் செய்தியாளர் அலெக்ஸ் போஜார்ஜியன் தொகுத்து வழங்கிகொண்டிருந்தார்.

அப்போது போட்டியாளர்கள் சிலர் கேமிராவின் முன் வந்து கைகளை அசைப்பது, வெற்றி சின்னங்களை காண்பித்து, ஆர்பரிப்பது, கையை அசைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர்.

திகைப்பு

திகைப்பு

அப்போது நேரலையாக செய்தியை வழங்கிக் கொண்டிருந்த அலக்ஸின் பின்புறத்தில் போட்டியாளர் ஒருவர் தட்டிச் சென்றார். இதனால் ஷாக்கான அந்த பெண் சிறிது நேரம் திகைத்து நின்றார்.

டாமி கால்வே

டாமி கால்வே

வீடியோவில் பதிவான அந்த போட்டியாளர் பின்னர் சமூகவலைதளங்கள் மூலம் கண்டறியப்பட்டார். பெண் செய்தியாளரை பின்புறத்தில் தட்டியவர் டாமி கால்வே ஆவார்.

கண்டனங்கள்

கண்டனங்கள்

43 வயதான இவர் ஜார்ஜியாவின் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதையடுத்து பெண் நிருபரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அமைச்சருக்கு எதிராக கண்டனங்களும் எதிர்ப்புகளும் குவிந்தன.

முயற்சி

முயற்சி

இதையடுத்து டாமி கால்வே மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பெண் நிருபரை பாராட்ட அவரது முதுகில்தான் தொட முயற்சித்தேன். ஆனால் தவறுதலாக அந்த இடத்தில் பட்டுவிட்டது.

மன்னிப்பை ஏற்க வேண்டும்

தவறான நோக்கத்தில் நான் அதை செய்யவில்லை. நான் செய்தது தவறு என்றால் அதற்கு அந்த செய்தியாளர் என் மன்னிப்பை ஏற்க வேண்டும் என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
A female reporter says that she was violated when a runner smacked her backside while she reporting live.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X