வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

16 வினாடிகளில் சீட்டுக் கட்டு போல் சரிந்தது 16 ஆயிரம் டன் இரும்பாலான மார்ட்டின் டவர்- வைரல் வீடியோ!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள மார்ட்டின் டவர் என்ற கட்டடம் வெறும் 16 வினாடிகளில் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் மார்ட்டின் டவர் உள்ளது. இது மொத்தமாக 16 ஆயிரம் டன் எடை கொண்ட இரும்பினால் கட்டப்பட்டது. இது 21 மாடிகளை கொண்டது.

Martin tower was demolished within 16 seconds

இது கடந்த 1972-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அமெரிக்காவின் இரண்டாவது பெரிய ஸ்டீல் உற்பத்தியாளர்கள் இந்த கட்டடத்தை பயன்படுத்தி வந்தனர். எனினும் இவர்களது வியாபாரம் நஷ்டமடைந்து விட்டதால் கடந்த 12 ஆண்டுகளாக இந்த கட்டடம் செயல்படாமல் இருந்து வந்தது.

இதையடுத்து இந்த கட்டடத்தை விலைக்கு வாங்கிய உரிமையாளர் அதை சீர் செய்ய விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை. இதையடுத்து அதை தரைமட்டமாக்க முடிவு செய்தார்.

பின்னர் 219 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 16 வினாடிகளில் இந்த 16 ஆயிரம் டன் கட்டடம் சரிந்தது. இதன் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

English summary
A Viral Video which shows a Martin tower demolished in 16 seconds. This building is made up of 16 thousands tonne iron.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X