வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊழியருடன் கசமுசா.. தப்பு செய்த மெக்டொனால்ட் சிஇஓ.. அதிரடி பணி நீக்கம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சக ஊழியருடன் உறவு வைத்ததாக, எழுந்த குற்றச்சாட்டையடுத்து, 'மெக்டொனால்டு கார்ப்' தலைமை நிர்வாகி, ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இருவருமே சம்மதித்துதான், இந்த செயலில் ஈடுபட்டனர் என்ற போதிலும், நிறுவனத்தின் கொள்கையை மீறிய செயல் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல் மெக்டொனால்டுக்கு தலைமை தாங்கியவர் 52 வயதான ஈஸ்டர் ப்ரூக். எனவே இந்த நடவடிக்கை, சக ஊழியர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது சரியில்லை.. அமெரிக்கா-ரஷ்யா இடையே பேராபத்து காத்திருக்கிறது.. கோர்பச்சேவ் பகிரங்க எச்சரிக்கைஇது சரியில்லை.. அமெரிக்கா-ரஷ்யா இடையே பேராபத்து காத்திருக்கிறது.. கோர்பச்சேவ் பகிரங்க எச்சரிக்கை

இமெயில்

இமெயில்

"இது ஒரு தவறுதான்" என்று ஈஸ்டர் ப்ரூக் ஞாயிற்றுக்கிழமை தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறியுள்ளார். "நிறுவனத்தின் மதிப்பு அடிப்படையில் பார்த்தால், நான் விலக வேண்டிய நேரம் இது. இந்த விஷயத்தில், நிறுவன குழுவுடன் நானும் உடன்படுகிறேன்." என்று அந்த இமெயிலில் அவர் தெரிவித்துள்ளார்.

இன்டெல் கார்ப் நிறுவனம்

இன்டெல் கார்ப் நிறுவனம்

அமெரிக்காவிலுள்ள பெரு நிறுவனங்களில், இரு தரப்பும் சம்மதித்து செக்ஸ் உறவு வைத்த குற்றச்சாட்டுகளின்கீழ், உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவது இது முதல் முறை இல்லை. 2018, ஜூன் மாதம், இன்டெல் கார்ப் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் க்ர்ஸானிச், அந்த நிறுவனத்தின் கொள்கையை மீறி, ஒரு ஊழியருடன் உறவு வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து ராஜினாமா செய்தார்.

புதிய சிஇஓ

புதிய சிஇஓ

'மெக்டொனால்டு அமெரிக்காவிற்கு' சமீபத்தில், தலைவராக நியமிக்கப்பட்ட, கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி (51), நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த உத்தரவு, உடனடியாக நடைமுறைக்கு வந்தது. அவர் மெக்டொனால்டு போர்டிலும் இணைந்துள்ளார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

கெம்ப்சின்ஸ்கி வெளியிட்ட, ஊழியர்களுக்கான தனது செய்தியில், ஈஸ்டர்ப்ரூக், தன்னை மெக்டொனால்டில் பணிக்கு சேர்த்ததை நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். மேலும், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வளர்ச்சித் திட்டத்தைத் தொடரும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

English summary
McDonald's Corp dismissed Chief Executive Steve Easterbrook over a recent consensual relationship with an employee, which the board determined violated company policy, the fast-food giant said on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X