வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருப்பின இளைஞர் இறப்பு ஒரு இனப்படுகொலை.. பிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு இறப்பு ஒரு இனப்படுகொலை என்று அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் அறிக்கை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    இனக் கொந்தளிப்பை எதிர்கொள்ளும் அமெரிக்கா

    ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர், கடந்த 24ஆம் தேதி போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை ஒரு போலீஸ் அதிகாரி முட்டிக் காலால் கழுத்தில் மிதித்தார். அப்போது தன்னால் சுவாசிக்க முடியவில்லை என அந்த இளைஞர் கெஞ்சியும் அந்த அதிகாரி விடாமல் நெரித்ததால் அந்த இளைஞர் இறந்தார். அதிலும் அந்த இளைஞரின் அசைவுகள் நின்றவுடனே அவர் காலை எடுத்தார்.

    பிளாய்டு கொலைக்கு நியாயம் கேட்டு மின்னபொலிஸ் மற்றும் அமெரிக்காவை சுற்றியுள்ள நகரங்களில் போராட்டங்கள் வலுத்துள்ளன. கொலை செய்த போலீஸ் அதிகாரி மீது 3ஆவது டிகிரி கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.

    தாங்க முடியவில்லை.. ஜார்ஜ் தாங்க முடியவில்லை.. ஜார்ஜ் "கொலையால்" பொங்கி எழுந்த ஒபாமா.. டிரம்ப் எதிர்பார்க்காத திருப்பம்!

    அறிக்கை

    அறிக்கை

    இந்த நிலையில் அவரது உடல் அரசு சார்பில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை வந்தது. அதில் பிளாய்டிற்கு அடிப்படையிலேயே உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் அவர் போதை பொருளை பயன்படுத்தியதாகவும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் கழுத்தை நெரித்ததால்தான் அவர் இறந்தார் என்பதற்கு எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    முடிவுகள்

    முடிவுகள்

    இந்த நிலையில் பிளாய்டின் உடலை நியூயார்க் நகரின் முன்னாள் தலைமை மருத்துவ அதிகாரி மைக்கேல் பேடன் மற்றும் அல்லிசியா வில்சன் ஆகியோர் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பிரேத பரிசோதனை செய்தனர். அதன் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது.

    மூளைக்கு செல்லும் ரத்தம்

    மூளைக்கு செல்லும் ரத்தம்

    பிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது கழுத்து மற்றும் பின்கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிளாய்டின் கழுத்தில் அந்த அதிகாரி கால் வைத்து நெரித்ததால் மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்பட்டது.

    முடிவுகளில் மாறுபாடு

    முடிவுகளில் மாறுபாடு

    அதனால் பிளாய்டால் சுவாசிக்க முடியவில்லை. கழுத்தை மிதித்த போது இதயம் செயலிழந்துவிட்டது. இது இனப்படுகொலையாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி டெரிக் சவுவின் மீது முதல் டிகிரி கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவருடன் இருந்த மற்ற மூன்று அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். குடும்பத்தினரால் செய்யப்பட்ட பிரேத பரிசோதனை முடிவுகள் அதிகாரிகளால் எடுக்கப்பட்ட முடிவுகளிலிருந்து மாறுபடுகிறது.

    எரிக் கார்னர்

    எரிக் கார்னர்

    மருத்துவர் பேடன் செய்த பிரேத பரிசோதனையில் பிளாய்டிற்கு இதய நோய் ஏதும் அவருக்கு கிடையாது என்றும் அவர் உடல்நல ஆரோக்கியத்துடன்தான் இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் பிளாய்டின் உடலை பரிசோதனை செய்த மருத்துவரே 2014-ஆம் ஆண்டு நியூயார்க் நகர போலீஸாரால் கொலை செய்யப்பட்ட எரிக் கார்னரின் உடலை பரிசோதனை செய்தவராவார்.

    English summary
    Medical officer Baden says George Floyd's death is homicide. The family's autopsy says he was very healthy and he had no heart disease.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X