வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல் : மெலானியா டிரம்ப் இன்று போட்ட ட்வீட் என்ன தெரியுமா?

அமெரிக்க மக்கள் நியாயமான தேர்தல்களுக்கு தகுதியானவர்கள். ஒவ்வொரு வாக்குகளும் எண்ணப்பட வேண்டும் என்று மெலானியா டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறிய உடன் அவரது மனைவி விவாகரத்து செய்து விடுவார் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் டிரம்ப்பிற்கு ஆதரவாக மெலனியா டிரம்ப் டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில், அமெரிக்க மக்கள் நியாயமான தேர்தல்களுக்கு தகுதியானவர்கள். ஒவ்வொரு வாக்குகளும் எண்ணப்பட வேண்டும், அது சட்டவிரோதமானதாக அல்ல, நமது ஜனநாயகத்தை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்து அடம் பிடித்து வருகிறார். அவரது அதிபர் பதவி வாழ்க்கையில் மட்டுமல்ல சொந்த வாழ்க்கையிலும் சர்ச்சை உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Melania Trump tweets the American people deserve fair elections

டிரம்ப் மெலானியா இடையே விவாகாரத்தாக வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய உடன் அவர் டிரம்பை விவாகரத்து செய்து விடுவார் என்றும் தகவல் வெளியாகி வருகின்றனர்.

டிரம்ப் - மெலனியா இடையே மனக்கசப்பு இருந்ததாக முன்பே தகவல்கள் வந்தாலும் இதுவரை அவர்கள் இந்த தகவலை மறுத்தே வந்துள்ளனர். இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்தால் மட்டுமே உண்மை தெரியவரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், டிரம்ப்பிற்கு ஆதரவாக மெலனியா டிரம்ப் டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அமெரிக்க மக்கள் நியாயமான தேர்தல்களுக்கு தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Melania Trump tweets the American people deserve fair elections

ஒவ்வொரு வாக்குகளும் எண்ணப்பட வேண்டும், அது சட்டவிரோதமானதாக அல்ல, நமது ஜனநாயகத்தை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் மெலானியா.

இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்ளுமாறு, டொனால்டு டிரம்பிடம் அவரது மனைவி மெலனியா வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சபர்மதி ஆசிரம புத்தகத்தில் கையெழுத்திட்ட டிரம்ப், மெலானியா.. ஈசிஜி ரிப்போர்ட் மாதிரி இருக்கே! சபர்மதி ஆசிரம புத்தகத்தில் கையெழுத்திட்ட டிரம்ப், மெலானியா.. ஈசிஜி ரிப்போர்ட் மாதிரி இருக்கே!

வழக்கமாக பல விவகரங்களில் தனது கருத்தை டிரம்பிடம் அவர் தனிமையில் தெரிவிப்பதை போன்று தேர்தல் முடிவு பற்றியும் கருத்து தெரிவித்துள்ளதாக சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு டிரம்பின் மருமகனும், மூத்த அரசியல் ஆலோசகருமான ஜாரெட் குஷ்னரும் இதே கருத்தை டிரம்பிடம் ஏற்கனவே வலியுறுத்தி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

English summary
Melania Trump post her twitter page, the American people deserve fair elections. Every legal not illegal vote should be counted. We must protect our democracy with complete transparency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X