வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூரியனை க்ராஸ் செய்யும் மெர்குரி.. வானில் இன்று இரவு, சிறப்பான சம்பவம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மெர்க்குரி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் புதன் கிரகம், சூரியனில் இருந்து மிகவும் தொலைவில் காணப்படும் ஒரு கோளாகும். இந்த கோள் சூரியனை கடந்து செல்லும் அரிய நிகழ்வு இன்று நடைபெறுகிறது.

டெலஸ்கோப்புகள் உள்ளிட்டவற்றின் உதவியுடன் இந்த அரிய நிகழ்வை காணலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. இதை பாதுகாப்பின்றி நேரடியாகவோ, பைனாகுலர்கள் உதவியுடனோ பார்க்கக்கூடாது என்றும் அவ்வாறு முயன்றால், கண் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.

அடுத்ததாக 2032ல் மட்டுமே அதாவது 13 ஆண்டுகள் கழித்தே இந்த நிகழ்வு நடைபெறும். இதை காண்பதற்காக நாசா பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதேபோல இந்தியாவின் பல பகுதிகளிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை! ஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை!

அரிய நிகழ்வு

அரிய நிகழ்வு

நிலவை விட பெரியதானாலும், பூமிக்கு மிக தொலைவில் உள்ளதால், சிறிய கோளாக பார்க்கப்படும் புதன் கிரகம், சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு இன்று நிகழ்கிறது. இந்தியாவில் இதை இன்று மாலை 4.30 மணிமுதல் நள்ளிரவு வரை காணமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வை அடுத்ததாக வரும் 2032ம் ஆண்டில்தான் மறுபடியும் காணமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நாடுகளில் தோன்றும்

கிழக்கு நாடுகளில் தோன்றும்

சூரிய வட்டு வழியாக புதன் கிரகம் கடந்து செல்லும் இந்த நிகழ்வு கிழக்கு நாடுகளில் காலை சூரிய உதயத்திற்கு பின்பு 7. 35 மணிக்கு துவங்கும் என்று ஆய்வியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியனை மறைத்த நிலவு

சூரியனை மறைத்த நிலவு

கடந்த 2017ல் நிலவு சூரியனை கடந்தபோது ஏற்பட்ட கிரகணம் இதேபோல வானியல் அதிசயமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது புதன் சூரியனை கடக்கும் இந்த நிகழ்வால், சூரியன் எந்தவிதத்திலும் மறைக்கப்படாது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியனை மறைக்காது

சூரியனை மறைக்காது

சூரியனில் இருந்து மிக அதிகமான தொலைவில் புதன் கிரகம் உள்ளதால், இது சூரியனை கடக்கும்போது அதன் ஒளியை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர். கிழக்கு கடற்கரை பகுதிகளில் சூரிய உதயத்திற்கு பிறகு இந்த நிகழ்வு தோன்றும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா, சீனாவின் பல பகுதிகள் மற்றும் கொரியாவில் இந்த நிகழ்வை காணமுடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்பார்வை பாதிக்கும்

கண்பார்வை பாதிக்கும்

புதன் கிரகத்தின் இந்த நகர்வை வெற்றுக் கண்களால் பார்க்கக்கூடாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கண்பார்வை பாதிக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களே என்ஜாய்

மாணவர்களே என்ஜாய்

வானியல் பாதையின் அரிய நிகழ்வாக பார்க்கப்படும் புதன் கிரகத்தின் நகர்வை, இன்றுடன் அடுத்த 2032 நவம்பர் அல்லது மே மாதத்தில் மட்டுமே அதாவது 13 ஆண்டுகளுக்கு பிறகே காணமுடியும். அதனால், மாணவர்கள் இந்த அரிய நிகழ்வை காண செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

புள்ளிகளாக தெரியும்

புள்ளிகளாக தெரியும்

இந்த நகர்வினால் பூமிக்கோ, மனிதன் உள்பட எந்த உயிரினங்களுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வு புள்ளிகளாகவே தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

English summary
Mercury's rare pass on Sun will happen on today, NASA said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X