வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாலைவனத்தின் நடுவே மர்ம உலோகத் தூண் திடீர் மாயம்.. ஒருவேளை வச்சதும், எடுத்ததும் அவர்கள்தானோ!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் பாலைவனத்தின் நடுவே மர்மமான முறையில் நிலை நிறுத்தப்பட்டிருந்த உலோகத் தூண் மாயமாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவன பகுதியில் கடந்த 18-ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பாலைவன பகுதியின் மையத்தில் ஏதோ பளபளவென இருந்தது.

சற்று அருகில் ஹெலிகாப்டரை கொண்டு சென்ற போது ஏதோ உலோகத் தூண் ஒரு நிற்க வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சட்டவிரோத குடியேற்றம்.. டிரம்பின் அதிரடி சட்டம்.. யுஎஸ் உச்ச நீதிமன்றம் நாளை விசாரணைசட்டவிரோத குடியேற்றம்.. டிரம்பின் அதிரடி சட்டம்.. யுஎஸ் உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

மர்ம உலோகத் தூண்

மர்ம உலோகத் தூண்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த மர்ம உலோகத் தூணை பாலைவன பகுதியில் உள்ள அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது பாலைவனத்தில் யாரும் இல்லாத இடத்தில் மர்மமான முறையில் 12 அடி உயரம் கொண்ட சில்வர் உலோகத் தூண் நிற்க வைக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இந்த தூணை யார் நிறுத்தியது, இந்த இடத்திற்கு எப்படி கொண்டு வரப்பட்டது என்பது போன்ற எந்த விவரமும் அவர்களுக்கு தெரியவில்லை. ஏற்கெனவே கொரோனா வைரஸாலும் அது சரியாக எங்கு பரவியது என்பது தெரியாமல் உலகமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

சமூகவலைதளவாசிகள்

சமூகவலைதளவாசிகள்

இந்த நிலையில் பாலைவனத்தில் உலோகத் தூண் ஒன்று மர்மமாக நிறுத்தப்பட்டிருந்த தகவலால் உலகமே பீதி அடைந்தது. இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது. இதையடுத்து சமூகவலைதளவாசிகள், ஒரு வேளை ஏலியன்களின் வேலையாக இருக்குமோ என மற்றொரு தகவலை பரப்பினர்.

பஞ்சமில்லை

பஞ்சமில்லை

இதனால் இந்த உலோகத் தூண் குறித்து அரிய மக்கள் ஆர்வம் காட்டினர். இந்த நிலையில் இந்த உலோகத் தூணை நிறுத்தியது யார் என அறிய பாலைவன அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த உலோகத் தூண் நேற்று முன் தினம் இரவு மாயமாகியுள்ளது.

தனியார் இடம்

தனியார் இடம்

அந்த தூணை தாங்கள் எடுத்துச் செல்லவில்லை என யூட்டா மாகாணத்தின் நில மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளையில் இதை எடுத்துச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த பாலைவனப்பகுதி தனியாருக்கு சொந்தமானது என்பதால் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

English summary
A mysterious metal monolith which was found in remote desert of the western United States disappeared.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X