வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெள்ளை மாளிகையின் கண்ணியத்தை காக்க.. ஜோ பிடன், கமலா ஹாரிஸ்க்கு மிச்சல் ஒபாமா சூப்பர் வாழ்த்து

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன், மற்றும் துணை அதிபராகும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் 290 எலக்ட்ரோல் வாக்குகளை பெற்று ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். 78 வயதாகும் ஜோ பிடன் தான், அமெரிக்க அதிபர்களிலேயே மிகவும் வயதானவர் ஆவார்.

இதேபோல் அமெரிக்க அதிபர் ஒருவர் (டிரம்ப்) இரண்டாவது முறையாக போட்டியிடும் போது தோல்வி அடைந்தது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவின் முதல் தமிழ் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு மு.க.ஸ்டாலின், சோனியா, ராகுல் காந்தி வாழ்த்து அமெரிக்காவின் முதல் தமிழ் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு மு.க.ஸ்டாலின், சோனியா, ராகுல் காந்தி வாழ்த்து

கமலாவுக்கு வாழ்த்து

கமலாவுக்கு வாழ்த்து

ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ஜோ பிடன், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் வெற்றி பெற்றதற்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நல்ல உள்ளங்கள்

நல்ல உள்ளங்கள்

முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், என் நண்பர்கள் ஜோ பிடன் மற்றும் முதல் கருப்பர் மற்றும் இந்திய அமெரிக்க பெண் கமலா ஹாரிஸ் ஆகியோர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்,
வெள்ளை மாளிகையின் கண்ணியத்தை காக்க திறமையும் நல்ல உள்ளமும் கொண்ட இவர்கள் தலைமை ஏற்றுள்ளனர். இது தான் நம் நாட்டிற்கு மிகவும் தேவை.

உங்கள் அனைவருக்கும் நன்றி

உங்கள் அனைவருக்கும் நன்றி

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த ஜனநாயகத்தின் மீது உங்கள் நம்பிக்கையையும் உறுதியையும் உறுதி செய்ய ஒவ்வொருவரும் வாக்குகளை பதிவுசெய்து நம்பிக்கை அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. முன்னெப்போதையும் விட இந்த தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது.இதற்கு வாக்காளர்களாகிய நீங்கள் தான் காரணம். கொண்டாட்டங்களில் இருந்து வெளியே வர வேண்டும், ஏனெனில் பல கஷ்டங்களை அனுபவித்த பின் வந்த முதல் ஆரம்பம். நாம் எதையும் வெல்லவில்லை.

மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்

மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்

பொய்கள், வெறுப்பு, குழப்பம் மற்றும் பிளவு ஆகியவற்றை ஆதரிப்பவர்களுக்கு மத்தியில், பல மில்லியன் மக்கள் வெற்றிக்காக நமக்கு வாக்களித்தனர் என்பதை நினைவில் கொள்வோம். அடுத்த ஆண்டுகளில் மக்களை அணுகவும், ஒன்றிணைக்கவும் நிறைய பணிகள் உள்ளன. அதேநேரம் முன்னேற்றத்திற்கான பாதை எப்போதும் மேல்நோக்கி இருக்கும் என்பதையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எப்போதும் வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும். இப்போதிலிருந்து நான்கு ஆண்டுகள், மீண்டும் தவறுகளின் விழிப்புக்கு சென்றுவிடக்கூடாது" என்று கூறினார்.

English summary
"I’m beyond thrilled that my friend Joe Biden and our first Black and Indian-American woman Vice President, Kamala Harris, are headed to restore some dignity, competence, and heart at the White House," Michelle Obama wrote on Twitter on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X