வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாரத்துக்கு நான்கு நாள் வேலை செஞ்சா போதும்... பரிசோதனை செய்த மைக்ரோசாப்ட்.. சூப்பர் ரிசல்ட்

Google Oneindia Tamil News

Recommended Video

    வேலை நாட்கள் குறைப்பு ! மைக்ரோசாப்ட் செய்த பரிசோதனை

    வாஷிங்டன்: உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான 'மைக்ரோசாப்ட்' தங்கள் நிறுவன ஊழியர்களை வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என்று சலுகை அறிவித்து இருந்தது.

    ஜப்பானில் செய்த இந்த பரிசோதனையில் சூப்பர் ரிசல்ட் கிடைத்திருப்பதாக அந்த நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

    உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்ஸின் நிறுவனம் மைக்ரோசாப்ட். மைக்ரோசாப்ட் கண்டுபிடித்த விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் தான் உலகம் முழுவதும் டெக்ஸ்டாப் மற்றும் லேப்டாப்களில் பெரும்பாலும் உள்ளது என்பது ஊரறிந்த விஷயம்.

    நாடு முழுவதும் வேலை நேரத்தை 9 மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரை.. முக்கிய தகவல்கள்!நாடு முழுவதும் வேலை நேரத்தை 9 மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரை.. முக்கிய தகவல்கள்!

    எவ்வளவு சலுகைகள்

    எவ்வளவு சலுகைகள்

    இந்தநிறுவனம் அதிக திறன் மற்றும் அதிபுத்திசாலிகளை உலகில் எங்கிருந்தாலும் தேடிபிடித்து வேலைக்கு சேர்க்கிறது. அவர்களுக்கு ஆரம்ப நிலையிலேயே பல லட்சங்களை சம்பளமாக கொடுத்து கவர்கிறது. அத்துடன் வேலை செய்பவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய ஜிம், விளையாட்டு கூடங்கள் , ஓய்வு அறை, வாரத்திற்கு இரண்டு நாள் விடுமுறை, குறைவான வேலைநேரம், விடுமுறைகள் என பல சலுகைகளை அளித்து வருகிறது.

    மைக்ரோசாப்ட் ஜப்பான்

    மைக்ரோசாப்ட் ஜப்பான்

    இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக ஜப்பானில் ஒரு சலுகையை தங்கள் ஊழியர்களுக்கு அறிவித்து இருந்தது. இதன்படி மைக்ரோசாப்ட் ஊழியர்கள், வாரத்துக்கு 5 நாட்களுக்கு பதில் இனி வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும் வேலை செய்தாலே போதும் என்று அறிவித்துள்ளது. ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்வது, அவர்களின் சொந்த வாழ்க்கைக்கும் நல்லது என்பதை உணர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவித்து இருந்தது.

    நல்ல பலன்

    நல்ல பலன்

    இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனம், ஒரு குறிப்பிட்ட குழுவை சேர்ந்த 2,300 ஊழியர்களுக்கு மாதம் 5 வெள்ளிகிழமைகள் விடுமுறை அறிவித்தது. இந்த விடுமுறைகள் அனைத்தும் ஊதியத்துடன் வழங்கப்பட்டது. இதன் மூலம், ஊழியர்களின் பணித் திறனும், தரமும் 40 சதவீதம் அதிகரித்து உள்ளதாக மைக்ரோசாப்ட்டின் ஜப்பான் கிளை தெரிவித்தது.

     மைக்ரோசாப்ட் மகிழ்ச்சி

    மைக்ரோசாப்ட் மகிழ்ச்சி

    விடுமுறை, பிடித்த நேரத்தில் வேலை செய்வது போன்ற சலுகைகள், ஊழியர்கள் வேலை செய்யாமல் டிமிக்கி கொடுக்கும் மனப்பான்மையை தடுத்து உள்ளது. நேரத்தை கடத்தும் செயலானது 25.4 சதவீதம் குறைந்து உள்ளது. மின்சார கட்டணம், காகிதங்கள் பயன்பாடு குறைந்துள்ளது என மைக்ரோசாப்ட் விடுமுறை அளித்ததற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளது. எனவே விரைவில் உலகம் முழுவதும் 4 நாட்கள் வேலை திட்டத்தை மைக்ரோசாப்ட் தொடங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

    English summary
    Microsoft tested 4-day work week for some employees in japan , productivity jumped by 40%
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X