• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ராணுவம் வாங்கும் 1.20 லட்சம் கண்ணாடிகள்.. விலையோ 21.88 பில்லியின் டாலர்.. இவ்வளவு வசதிகள் இருக்கா!

|

வாஷிங்டன்: அறிவியலின் அடுத்தகட்ட பாய்ச்சலாக சுமார் 21.88 பில்லியின் டாலர் ஹோலோலென்ஸ் ஆக்மெண்ட்டெட்-ரியாலிட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மைக்ரோசாப்ட் நிறுவனம், அமெரிக்கா ராணுவத்திற்குக் கண்ணாடிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

  China-வுக்கு போட்டியாக ‘Mountain Tanks’ | Arjun Mark-1 ALFA சோதனை வெற்றி | Oneindia Tamil

  உலகத்தில் அறிவியலின் சாதனைகளுக்கு ஈடு இணை இல்லை. ஒவ்வொரு நாளும் இதுதான் அறிவியலின் உச்சம் என நாம் நினைக்கும்போது, புதிய கண்டுபிடிப்புகள் பழைய கண்டுபிடிப்புகளை ஓரம் கட்டிவிடுகின்றன

  அனைத்து துறைகளைப் போலவே ராணுவமும் இந்தப் புதிய தொழில்நுட்பங்களை தங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்கின்றன. இதன் மூலம் ராணுவ வீரர்களின் உயிர்கள் பாதுகாக்கப்படும், அதேநேரம் பயங்கவாதிகளையும் சரியாகக் குறிவைத்து அழிக்க முடிவதாகத் தெரிவித்துள்ளனர்.

  நீங்க மிரட்டினா...நாங்க விலைக்கே வாங்குவோம்...டிக் டாக் ஆப்...வாங்குகிறது மைக்ரோசாப்ட்.!! நீங்க மிரட்டினா...நாங்க விலைக்கே வாங்குவோம்...டிக் டாக் ஆப்...வாங்குகிறது மைக்ரோசாப்ட்.!!

  ரூ 1.63 லட்சம் கோடி

  ரூ 1.63 லட்சம் கோடி

  இந்நிலையில், சுமார் 1.20 லட்சம் ஆக்மெண்ட்டெட் ரியாலிட்டி கண்ணாடிகளுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் சுமார் 21.88 பில்லியின் டாலர் மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த கண்ணாடிகளை முழுவதுமாக உருவாக்க 10 ஆண்டுகள் வரை எனக் கூறப்படுகிறது. 21.88 மில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் ரூ 1.63 லட்சம் கோடியாகும்.

  ஹோலோலென்ஸ் ஆக்மெண்ட்டெட்-ரியாலிட்டி

  ஹோலோலென்ஸ் ஆக்மெண்ட்டெட்-ரியாலிட்டி

  10 ஆண்டுகள் வரை எடுத்துக் கொண்டாலும் அட்டகாசமான ஒரு கண்ணாடியையே உருவாக்க மைக்ரோசாப்ட் முயன்று வருகிறது. ஹோலோலென்ஸ் ஆக்மெண்ட்டெட்-ரியாலிட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ராணுவ பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த ஹேட்செட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு கணினி, சென்சார்கள், லென்ஸை, டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டிருக்கும்படி இந்தக் கண்ணாடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

  புதிய IVAS தொழில்நுட்பம்

  புதிய IVAS தொழில்நுட்பம்

  IVAS என்று அழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பத்தில், அமெரிக்க ராணுவம் 2018இல் இருந்தே ஆர்வம் கா்டடி வருகிறது. இதை அணிந்து கொண்டு ஒருவரால் 3,000 அடி முதல் 900 அடி வரை தெளிவாகப் பார்க்க முடியும். அதேபோல குறைந்த ஒளியிலும்கூட 40 முதல் 80 டிகிரி வரை ஒருவரால் இதை அணிந்து கொண்டு பார்க்க முடியும்.

  அட்டகாசமான வசதிகள்

  அட்டகாசமான வசதிகள்

  இந்த IVAS தொழில்நுட்பத்திற்கு மற்றொரு முக்கிய சிறப்பம்சம் உள்ளது. அதாவது, சுற்றியுள்ள கேமராக்களில் பதிவுசெய்யப்பட்ட வீடியோவை நேரலையாக இந்த கண்ணாடியில் பார்க்க முடியும். அதாவது ஒருவர் டாங்கி இருக்கிறார் என்றால், வெளியே உள்ள கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை அவர் உள்ளே இருந்தபடியே பார்க்க முடியும். இப்போது, இந்த வீடியோக்கள் உள்ளிருக்கும் சிறு கணினிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இனி அந்த கணினிகளும் தேவைப்படாது.

  வீடியோ கேம்கள்

  வீடியோ கேம்கள்

  இது தவிரவும் கூட வீடியோ கேம்களில் உள்ளதைப்போலப் பல புதிய வசதிகளையும் அந்தக் கண்ணாடிகள் பெற்றுள்ளன. திசைகாட்டி, முக அடையாளம் கருவி உள்ளிட்டவையும் இதில் இடம் பெற்றுள்ளன. வீடியோ கேம்களில் உள்ள தொழில்நுட்பங்கள் இதில் இடம் பெற்றதில் ஆச்சரியம் எதுவும் கொள்ளத் தேவையில்லை. ஏன்னெறால், இந்த தொழில்நுட்பத்தை முதலில் வீடியோ கேம்களுக்கு தான் மைக்ரோசாப்ட் உருவாக்கியிருந்தது.

  ஊழியர்கள் தயக்கம்

  ஊழியர்கள் தயக்கம்

  அதே தொழில்நுட்பத்தை ராணுவத்திற்கு ஏற்ற வகையில் மாற்ற சில ஊழியர்கள் தயக்கம் காட்டின. இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் மைக்ரோசாப்ட் மற்றும் ராணுவம் இணைந்து பணியாற்றும் என 2018இல் அறிவித்தபோது பல ஊழியர்கள் இதற்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயுத தொழில்நுட்பத்தை உருவாக்க தாங்கள் பணியமர்த்தப்படவில்லை என்று மைக்ரோசாப்ட் சிஇஓ வெளிப்படையாகவே கடிதம் எழுதினர்.

  English summary
  Microsoft news HoloLens augmented-reality goggles for US army.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X