வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிரடி.. டிரம்ப்புக்கு எதிராக திரும்பிய துணை அதிபர் மைக் பென்ஸ்! அரசியல் சாசனப்படி நடப்பேன் என உறுதி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஜோ பிடன் தேர்தல் வெற்றியை தடுக்க டிரம்ப் விடுத்த கோரிக்கையை துணை அதிபர் மைக் பென்ஸ் ஏற்க மறுத்துவிட்டார். அரசியல் சாசனத்தின்படிதான் செயல்படுவேன் என்று மைக் பென்ஸ் திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால், டொனால்ட் டிரம்ப்பின் கடைசி கட்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. அன்று முதல், டிசம்பர் முதல் வாரம் வரை, தொடர்ந்து அங்கு வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், வெற்றி பெற்றதாக ஊடகங்கள் கணிப்பு வெளியிட்டன.

ஆனால் இதை குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்டு டிரம்ப் இதை ஏற்க மறுத்து பல மாகாணங்களில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவை நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்தியாவை தொடர்ந்து..சீனாவின் 8 மொபைல் 'ஆப்'களுக்கு 'ஆப்பு' வைத்த டிரம்ப்...தடை விதித்து உத்தரவு!இந்தியாவை தொடர்ந்து..சீனாவின் 8 மொபைல் 'ஆப்'களுக்கு 'ஆப்பு' வைத்த டிரம்ப்...தடை விதித்து உத்தரவு!

ஜனநாயக கட்சி வேட்பாளர்

ஜனநாயக கட்சி வேட்பாளர்

மொத்தம் உள்ள 50 மாகாணங்களிலும் டிசம்பர் 10ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெற்றிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் கடைசி மாகாணமாக சேர்ந்தது விர்ஜினியா. அங்குள்ள 5 தேர்தல் வாக்குகளை டொனால்ட் ட்ரம்ப் பெற்றார். ஜோ பிடன் 306 தேர்தல் வாக்குகளையும், டொனால்டு டிரம்ப் 232 தேர்தல் வாக்குகளையும் பெற்றனர். மொத்தம், 538 தேர்தல் வாக்குகள் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றத்தில் 270க்கு மேல் யார் பெறுகிறார்களோ அவர்களே அதிபர்.

மாகாண அரசு சான்றிதழ்

மாகாண அரசு சான்றிதழ்

அமெரிக்கத் தேர்தல் விதிமுறைகளின்படி ஒவ்வொரு மாகாண அரசும் யார் வெற்றி பெற்றார்கள் என்பது குறித்து சான்றிதழை அந்நாட்டு நாடாளுமன்றத்திடம் அளிக்கும். இன்று அந்த சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு, அதன்படி எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் ஒன்றுகூடி புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த நிகழ்வில்தான் டிரம்ப் ஆதரவு எம்பிகள் பிடனின் வெற்றிக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கவுள்ளனர். இருப்பினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் இதனால் பெரிய பாதிப்பு இருக்காது.

டிரம்ப் வலியுறுத்தல்

டிரம்ப் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் தேர்தல் முடிவு சான்றிதழ்களைத் துணை அதிபர் மைக் பென்ஸ் தான் உறுதி செய்வார். எனவே, அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, ஜனநாயக கட்சி வென்ற சில மாகாணங்களைச் சேர்ந்த எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களை நீக்க வேண்டும் என்று டிரம்ப், மைக் பென்ஸுக்கு வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் சாசனம்

அரசியல் சாசனம்

அதிபர் டிரம்ப் கூறுகையில், "இந்த விஷயத்தில் செயல்படத் துணை அதிபருக்கு அதிகாரம் உள்ளது என்பதில் நானும் பென்ஸும் உறுதியாக உள்ளோம். அமெரிக்காவின் அரசியலமைப்பின் கீழ் துணை அதிபருக்கு இதுபோல பல அதிகாரங்கள் உள்ளன. மாகாண தேர்தல் முடிவுகளை ரத்து செய்யவும் செல்லாது என்றும் அறிவிக்கவும் அவரால் முடியும். அவர் இதைச் செய்யவில்லை என்றால், எனக்குப் பிடிக்காத நபராக அவர் ஆகிவிடுவார்" என்று தெரிவித்தார். இதனால் மைக் பென்ஸ் என்ன செய்வார் என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

டிரம்ப் கோரிக்கை நிராகரிப்பு

டிரம்ப் கோரிக்கை நிராகரிப்பு

ஆனால், ஜோ பிடன் தேர்தல் வெற்றியை தடுக்க டிரம்ப் விடுத்த கோரிக்கையை துணை அதிபர் மைக் பென்ஸ் ஏற்க மறுத்துள்ளார். ஒரு வேட்பாளரின் சில எலக்டோரல் காலேஜ் வாக்குகளை நிராகரிக்க ஒரு துணை ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்று டிரம்ப் கூறினார் என்பதை நான் நம்பவில்லை என்று பென்ஸ் தனது கடிதத்தில் கூறியுள்ளார். "அரசியலமைப்பை பின்பற்றுவேன் என்றும் பாதுகாப்பேன் என்றும் நான் செய்த பதவிப் பிரமாணத்தை காப்பாற்றுவேன். எந்த வாக்குகளை எண்ண வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை தீர்மானிக்க எனக்கு அதிகாரம் உள்ளது. அதில் யாரும் தலையிட முடியாது" என்று காங்கிரஸ் உறுப்பினர்களுக்கான தனது 3 பக்க கடித உரையில், பென்ஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதிகள்

மக்கள் பிரதிநிதிகள்

"அதிபர் பதவி அமெரிக்க மக்களுக்கு சொந்தமானது, அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது" "அதிபர் தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் எழும்போது, ​​கூட்டாட்சி சட்டத்தின் கீழ், மக்கள் பிரதிநிதிகள் தான் ஆதாரங்களை மறுஆய்வு செய்து ஜனநாயக வழிமுறையின் மூலம் அந்த பிரச்சினைகளை தீர்ப்பார்கள்." என்று பென்ஸ் தனது கடிதத்தில் கூறியுள்ளார். எனவே துணை அதிபர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி, ஓட்டுக்களை நிராகரிக்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் டிரம்ப் அதிர்ச்சியடைந்துள்ளார்.

English summary
Vice President Mike Pence on Wednesday publicly broke with President Donald Trump, saying he cannot submit to demands he overthrow the results of the election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X