வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவுக்கான அமெரிக்கா தூதர் டெர்ரி பிரான்ஸ்டட் பதவி விலகுகிறார்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சீனாவுக்கான அமெரிக்கா தூதர் டெர்ரி பிரான்ஸ்டட் தமது பதவியில் இருந்து விலக உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தமது ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் லோவோ மாகாண ஆளுநராக இருந்தவர் டெர்ரி பிரான்ஸ்டட். கடந்த 2016-ம் ஆண்டு சீனாவுக்கான அமெரிக்காவின் தூதராக நியமிக்கப்பட்டார்.

Mike Pompeo tweets on US Ambassador to China Stepping Down

பிரான்ஸ்டட் நியமனத்தின் போது, சீனாவின் நெருங்கிய நண்பர் தூதராக நியமிக்கப்படுவதாக ஊடகங்கள் எழுதின. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவுக்கான அமெரிக்கா தூதராக பணியாற்றிய நிலையில் டெர்ரி பிரான்ஸ்டட் பதவி விலக இருக்கிறார்.

ஜனாதிபதி, பிரதமர், கருணாநிதி... ஆகியோரை வேவு பார்த்த சீன இணையதளம்... பகீர் தகவல்கள் அம்பலம்!!ஜனாதிபதி, பிரதமர், கருணாநிதி... ஆகியோரை வேவு பார்த்த சீன இணையதளம்... பகீர் தகவல்கள் அம்பலம்!!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தமது ட்விட்டர் பக்கத்தில் டெர்ரி பிரான்ஸ்டட் பணியை பாராட்டியிருக்கிறார். போம்பியோ தமது ட்விட்டர் பக்கத்தில், 3 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவுக்கான தூதராக அமெரிக்கா மக்களுக்கு சேவையாற்றிய டெர்ரி பிரான்ஸ்டடுக்கு நன்றி.

Mike Pompeo tweets on US Ambassador to China Stepping Down

சீனா விவகாரங்களை பல ஆண்டுகளாக சிறப்பாக கையாண்டதால் டெர்ரி பிரான்ஸ்டட்டை அமெரிக்காவுக்கான தூதராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்தார். டெர்ரி பிரான்ஸ்டட் தமது பணிக்காலத்தில் அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகளில் உக்கிர மோதல்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனா விவகாரத்தில் சீனாவை அமெரிக்கா அதிபர் டிரம்ப் மிக மிக கடுமையாக விமர்சித்தார். தென்சீனா கடற்பரப்பில் அமெரிக்காவும் சீனாவும் மல்லுக்கட்டி நிற்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
US Secretary of State Mike Pompeo tweets that the US ambassador to China Terry Branstad is stepping down.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X