வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலன் தருகிறது.. ஆய்வில் தகவல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனாவுக்கான அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலனை தருவதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தங்கள் மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க கோரி அமெரிக்க மருந்து பாதுகாப்பு நிறுவனத்தில் மாடர்னா விண்ணப்பிக்கவுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு நாளைக்கு 1,60,000 பேர் பாதிக்கப்படுகிறார்கள். தினந்தோறும் 1400 க்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர். சீனாவில் இருந்து பரவிய வைரஸ் உலகம் முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமானோரை கொன்றுள்ளது.

Moderna asks US to allow Covid 19 vaccine as emergency use

இதனால் கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளன. அது போல் அமெரிக்காவில் மாடர்னா எனும் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 38,722 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 94 லட்சத்தை தாண்டியது!இந்தியாவில் 24 மணிநேரத்தில் 38,722 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 94 லட்சத்தை தாண்டியது!

இந்த நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை 30 ஆயிரம் பேருக்கு சோதனை ஓட்டமாக செலுத்தப்பட்டது. இதில் 100 சதவீதம் பலனை தருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க கோரி அமெரிக்க மருந்து பாதுகாப்பு நிறுவனத்தில் மாடர்னா விண்ணப்பித்துள்ளது.

ஒரு வேளை மாடர்னா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் 20 மில்லியன் மருந்துகள் தயாரிக்கப்படும். ஒருவருக்கு இரு டோஸ்கள் தேவைப்படுகிறது. எனவே இந்த நிறுவனம் தயாரிக்கும் மருந்து 10 மில்லியன் பேருக்கு சரியாக இருக்கும்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்து 90 சதவீதம் அளவிற்கு கொரோனா தொற்றிலிருந்து காக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு பிறகு மாடர்னா நிறுவனம் தங்களது மருந்துகள் 95 சதவீதம் பலனை தருவதாக மாடர்னா கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

Moderna asks US to allow Covid 19 vaccine as emergency use

இந்த நிலையில் தற்போது மாடர்னாவின் தடுப்பு மருந்து 100 சதவீதம் பலனளிப்பதாக ஆய்வுகளில் தெரியவந்தது. மாடர்னா தடுப்பு மருந்தை 6 மாத காலத்திற்கு 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைக்கலாம். இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸை போன்ற ஒரு வைரஸை உடலில் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையில் உள்ளது.

சோதனை முயற்சியாக 30 ஆயிரம் பேரில் 15 ஆயிரம் பேருக்கு இந்த மருந்து 4 வாரங்கள் இடைவெளியில் இரு டோஸ்களாக வழங்கப்பட்டன. மீதமுள்ள 15 ஆயிரம் பேருக்கு டம்மி ஊசிகள் செலுத்தப்பட்டன. மொத்தம் ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட 196 கொரோனா கேஸ்களில் 185 பேர் சோதனை ஓட்டத்திற்காக வந்தனர்.

அவர்களில் 11 பேருக்கு உண்மையான வேக்சின் வழங்கப்பட்டது. பிபிசர் நிறுவனம் உலகம் முழுவதும் டிசம்பர் மாதம் 50 மில்லியன் ஊசிகளை தயார் செய்ய முடிவு செய்துள்ளது.

English summary
Moderna asks US to allow Covid 19 vaccine as emergency use.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X