வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா ஆர்வமுடன் எதிர்பார்க்கும் மாடர்னா தடுப்பூசி விலை எவ்வளவு.. வெளியான தகவல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸின் விலை அமெரிக்காவில் 50 முதல் 60 டாலராக இருக்கும் என்றும் குறைந்தபட்ச விலை 11 டாலராக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.4491 வரை இருக்கும்.

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. மாடர்னா நிறுவனம் கொரோனா தடுப்பூசியை குரங்குகளுக்கு செலுத்தி சோதித்ததில், வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டி உள்ளது என்றும கொரோனா வைரஸை குரங்குகளின் மூக்கு மற்றும் நுரையீரலில் பரவாமல் தடுத்துள்ளது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த சாதகமான முடிவுகளால் அடுத்த கட்டமாக 30,000 மனிதர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய பரிசோதனையை மாடர்னா நிறுவனம் நடத்தி வருகிறது. தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனைத் தீர்மானிப்பதற்கான 3 கட்ட சோதனைகளும் நவம்பர் அல்லது டிசம்பரில் முடிவடைய உள்ளது.

இன்னும் 2 வாரம்.. ரஷ்யாவில் தயாராகும் கொரோனா தடுப்பூசி ரெடி.. முதலில் டாக்டர்களுக்கு செலுத்தப்படும்இன்னும் 2 வாரம்.. ரஷ்யாவில் தயாராகும் கொரோனா தடுப்பூசி ரெடி.. முதலில் டாக்டர்களுக்கு செலுத்தப்படும்

1,871 ரூபாய்

1,871 ரூபாய்

இந்நிலையில் விலை இறுதி செய்யப்பட வில்லை என்றாலும் மாடர்னா தடுப்பூசியின் இரண்டு டோஸ் விலை $ 50 முதல் $ 60 வரை ( one course) நிர்ணயிக்கப்படலாம் என்று மாடர்னா வட்டாரங்கள் தெரிவித்தன. குறைந்தபட்சம் ஒரு டோஸ் விலை , $25-$30 ஆக நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளது, அதாவது மருந்தின் இரண்டு டோஸ் விலை இந்திய மதிப்பில் ரூ 4491 வரை இருக்கும். அதேநேரம் ஒரு டோஸின் விலை 1,871 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

5 கோடி மக்கள்

5 கோடி மக்கள்

இது அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ள ஜெர்மனியின் ஃபைசர் இன்க் மற்றும் பயோஎன்டெக்கின் விலையை விட அதிகமாக இருக்கிறது. ஜெர்மனியின் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்துடன் அமெரிக்க அரசு 2 பில்லியன் டாலரில் மருந்து வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்துள்ளது. 5 கோடி மக்களுக்கு இந்த மருந்தை அமெரிக்கா வழங்க திட்டமிட்டுள்ளது.

விலை விவரம்

விலை விவரம்

இதனிடையே மாடர்னா தடுப்பூசி அமெரிக்காவிற்கும் பிற உயர் வருமான நாடுகளுக்கும் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை பொருந்தும் என்று தகல்கள் வெளியாகி உள்ளது. இந்த தடுப்பூசியை வழங்குவது குறித்து மாடர்னா நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால் இறுதி விலை நிர்ணயம் குறித்த எந்த விவரங்களையும் வழங்கவில்லை என்றும் மாடர்னா செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இதேபோல் தடுப்பூசியின் விலை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Corona vaccine: மக்களுக்கு கொடுக்க தீவிரம் காட்டும் Russia
    லாபம் வேண்டாம்

    லாபம் வேண்டாம்

    ஃபைசர், மாடர்னா மற்றும் மெர்க் அண்ட் கோ ஆகியவை தங்களது கொரோனா தடுப்பூசிகளை லாபத்தில் விற்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளன, அதே நேரத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளிட்ட சில மருந்து தயாரிப்பாளர்கள் தங்கள் தடுப்பூசிகளை லாபத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய மாட்டோம் என அறிவித்துள்ளனர்.

    English summary
    The price Moderna is seeking is not likely to be final. In a range of about $50 to $60 for a course — that is, $25-$30 per dose.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X