வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கத்தார் இளவரசர், ஜெர்மனி அதிபர் உட்பட பல நாட்டு தலைவர்களுடன் மோடி சந்திப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஐ.நா. பொதுச் சபையின் 74வது ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்காவின் நியூயார்க் சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு அவர், பல நாட்டு தலைவர்களை சந்தித்து மரியாதை நிமித்தமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கத்தார் இளவரசருடனான சந்திப்பு நியூயார்க்கில் பிரதமர் மோடியின் முதல் இருதரப்பு சந்திப்பு ஆகும். அப்போது இரு தலைவர்களும் கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்தினர். இரு தலைவர்களும் முழு அளவிலான இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசித்தனர்.

Modi meets world leaders in US

யோகாவை உலகளவில் பிரபலமாக்குவதற்கான முயற்சிகளை எடுத்த பிரதமர் மோடியை, கத்தார் இளவரசர் பாராட்டியுள்ளார்.
இதேபோல, இத்தாலி பிரதமர் கியூசெப் கான்ட்டே, நைஜிர் அதிபர் முகமது இசோபூ, பூட்டான் லோட்டோ செரிங்க், கொலம்பியா அதிபர் இவான்மெர்ரிக்யூ, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே, ஐ.நா. சர்வதேச குழந்தைகள் அமைப்பின் தலைவர் ஹென்ரீட்டா உள்ளிட்டோருடனும் மோடி சந்திப்பு நிகழ்த்தினார்.

English summary
India and Qatar reviewed the full range of their ties during a bilateral meeting between Prime Minister Narendra Modi and its Emir, Sheikh Tamim Bin Hamad Al Thani, on the sidelines of the UNGA here on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X