India
  • search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கெட்டியாக இருந்த கெளுத்தி மீன்.. வயிற்றுக்குள் இருந்த "பலான" பொருள்! அப்படியே வாயை பிளந்த மீனவர்கள்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன: அமெரிக்காவில் மீனவர்கள் வலையில் சிக்கிய மீனுக்கு உள்ளே இருந்த பொருளைப் பார்த்து மிரண்டு போய்விட்டனர்.

பொதுவாக மீன்கள் கடலில் கிடைக்கும் அனைத்தையும் உண்டு உயிர் வாழ்வது வழக்கம். சிறிய மீன்கள் பெரிய மீன்களையும், பெரியவற்றை அதைவிடப் பெரிய மீன்களும் உண்ணும்.

சில சமயங்களில் கடலில் கிடக்கும் தேவையில்லாத பொருட்களையும் கூட தின்றுவிடும். மனிதர்கள் அலட்சியமாகக் கடலில் போடும் பொருட்களை உண்பதால் மீன்களுக்குப் பெரிய ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

அப்படியொரு சம்பவம் தான் அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் நடந்துள்ளது. இந்தியானா மாகாணத்தின் ஷெல்பிவில்லே பகுதியைச் சேர்ந்த மீனவர் ரிச்சர்ட் கேசர். இவர் கடந்த வாரம் தனது நண்பரான ஜான் ஹூப்பை என்பவருடன் சேர்ந்து ஓஹியோ ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். எப்படியாவது நீல நிற கேட்ஃபிஷை பிடிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் இலக்கு!

 மீன்

மீன்

இதற்காக அவர்கள் நீண்ட நேரம் முயன்றுள்ளனர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், கடைசியாக அவர்கள் பெரிய ஒரு நீல கேட்ஃபிஷை வெற்றிகரமாகப் பிடித்தனர். இருப்பினும், அதிலும் ஒரு ஆச்சரியம் அடங்கி இருந்தது. கேட்ஃபிஷ் எனப்படும் அந்த கெளுத்தி மீனின் வயது வழக்கத்தைத் தாண்டியும் பெரிதாக இருந்துள்ளது. முதலில் அந்த மீன் கருவுற்று இருக்கலாம் என்று கருதினர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இருப்பினும், தொட்டுப் பார்க்கும் போது அதன் வயிற்றுப் பகுதி சற்று கடினமாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், அங்கேயே வைத்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க முடிவு செய்துள்ளனர். அப்படி தான் மீனின் வயிற்றுப் பகுதியை ஓப்பன் செய்து பார்க்கும் போது, உள்ளே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர். காரணம் அந்த கெளுத்தி மீனின் வயிற்றுக்கு உள்ளே செக்ஸ் டாய் இருந்துள்ளது.

இயல்பு

இயல்பு

இது தொடர்பாக அந்த மீனவர் கூறுகையில், "நாங்கள் கெளுத்தி மீனைப் பிடித்த போது, அதன் வயிறு பெரியதாக இருப்பதைக் கவனித்தோம். முதலில், அது முட்டையாக இருக்கலாம். அல்லது சமீபத்தில் சாப்பிட்ட சிறிய மீனாக இருக்கலாம் என்றே கருதினேன். ஏனென்றால் மீன்கள், சில நேரங்களில் ஆமைகள் உள்ளிட்ட மற்ற விலங்குகளைச் சாப்பிடுவது இயல்பானதே!

எலும்புகள்

எலும்புகள்

இருப்பினும், சில மணி நேரம் கழித்து நான் அந்த மீனின் வயிற்றுப் பகுதியை அழுத்திப் பார்த்தேன். உள்ளே இரு கடினமான பொருட்கள் இருப்பதை உணர்ந்தேன். அப்போதே எனக்கு அது முட்டையாக இருக்காது எனத் தெரிந்துவிட்டது. வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அதை வெட்டி பார்த்தோம். மற்றொரு மீனின் மீதமற்ற எலும்புகள் இருந்தது. ஆனால், அதன் அருகே இருந்த மற்றொரு பொருள் தான் ஆச்சரியத்தைத் தந்தது" என்றார்.

 3 வயது மகள்

3 வயது மகள்

இதையடுத்து கேசர் தனது பேஸ்புக் பக்கத்தில் கெளுத்தி மீன் மற்றும் அதன் உள்ளே இருந்த "அந்த" பொருளின் படத்தையும் பகிர்ந்து உள்ளார். இது உடனடியாக பலராலும் பகிரப்படத் தொடங்கியது. கேசர் மேலும் கூறுகையில், "இதைப் பார்த்ததும் நானும் எனது மனைவியும் சிரிக்க ஆரம்பித்துவிட்டோம். எனது மனைவி உடனடியாக எனது 3 வயது மகளின் கண்ணை மூடி, அழைத்துச் சென்றுவிட்டார்.

மீன்கள்

மீன்கள்

இப்போது வரை அது என்ன என்று எனது மகள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனால், அதை என்னால் சொல்ல முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல கடல் மற்றும் ஆறுகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் பல மீன் வகைகளை நாம் இழக்க நேரிடும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

English summary
Two Indiana fishermen got a secret toy in a blue catfish: (மனிதன் போடும் குப்பைகளைச் சாப்பிடும் மீன்கள்) Fish eating all dirty objects in sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X