வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிலாவில் நிறைய தண்ணீர் இருக்கு.. முதல் முறையாக உறுதி செய்த நாசா.. குடிக்க குடத்தில் எடுக்கலாம் போலயே

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இதுவரை ஆய்வுகளில் கண்டிராத அளவுக்கு அதிக அளவுக்கு நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருக்கிறது என்று அமெரிக்க தேசிய விண்கல மற்றும் விண்வெளி ஆய்வு மையம் நாசா உறுதி செய்துள்ளது.

நமது நாட்டின் சந்திரயான்-1 விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை முதன் முதலில் கண்டுபிடித்தது.

இருப்பினும் அது தண்ணீரின் மூலக்கூறுகளா அல்லது ஹைட்ராக்சில் மூலக்கூறுகளா எனப் பிரித்து அறிவதில் சிரமம் இருந்தது. தற்போது இந்த ஆய்வில் அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது நாசா.

சூரிய ஒளி பகுதிகள்

சூரிய ஒளி பகுதிகள்

சில பல ஆண்டுகள் முன்பு வரை நிலவின் மேற்பரப்பு ஈரப்பதம் இல்லாமல் காய்ந்து இருக்கக்கூடிய ஒரு பகுதி என்றுதான் கூறப்பட்டு வந்தது. ஆனால் படிப்படியான ஆராய்ச்சிகளின் முடிவில் அங்கு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. அதுவும் சூரிய ஒளி உள்ள பகுதிகளில் கூட தண்ணீரின் மூலக்கூறு இருக்கிறது என்பதற்கான மேலதிக கெமிக்கல் ஆய்வு முடிவுகளை நாசா வழங்கியுள்ளது.

நிறைய தண்ணீர்

நிறைய தண்ணீர்

நாசாவின் பறக்கும் ஆய்வக விமானமான சோஃபியா மூலமாக, முன்பைவிட அதிக துல்லியமான அலைவீச்சு மூலமாக ஸ்கேன் செய்தனர் விஞ்ஞானிகள். அதாவது முன்பு மூன்று மைக்ரான் அலை நீளம் பயன்படுத்தப்பட்ட நிலையில், ஆறு மைக்ரான் அளவுக்கான அலைவீச்சு பயன்படுத்தி நிலவின் மேற்பரப்பில் நிறைய தண்ணீர் இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளது நாசா. கிளாவியஸ் என்ற பள்ளமான பகுதியில் நீர் இருப்பு இருக்கிறது.

எங்கே இருந்து வந்தது

எங்கே இருந்து வந்தது

சந்திரனில் காணப்படும் தண்ணீர் எங்கே இருந்து வந்திருக்கலாம், அது எவ்வாறு அங்கு சேமிப்பு செய்யப்பட்டு உள்ளது என்பதை புரிந்துகொள்ள மேலும் தீவிர ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

மனிதர்கள் குடியேற்றம்

சில இடங்களில் தண்ணீர் மிகவும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால், மனித குடியேற்றத்திற்கு அது உதவிகரமாக இருக்கும் என்கிறார் ஆய்வாளர் ஹோனிபால். அந்த தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம், சுவாசிக்கும் ஆக்சிஜனுக்கு, பயன்படுத்தலாம் ராக்கெட்டுகளுக்கான எரிபொருளாக பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறுகிறார்.

English summary
There may be far more water on the Moon than previously thought says NASA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X