வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செவ்வாய் கிரகத்திலும் முதல் முறையாக நில அதிர்வு.. ஆடியோ வெளியிட்டு பகீர் கிளப்பும் நாசா!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் முதல் முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆடியோவை நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.

இதுவரை பூமியிலும் கடலிலும் மட்டுமே நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்படும் என நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் கிரகங்களிலும் நிலநடுக்கம் ஏற்படும் என நாசா ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.

அதாவது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்ய கடந்த 6 மாதங்களுக்கு முன் இன்சைட் விண்கலன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது செவ்வாயின் நிலப்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

சன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு சன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு

கருவிகள்

கருவிகள்

இதில் கிரகங்களின் வெப்பநிலையை கணக்கிடும் கருவி, சுழற்சி மற்றும் நிலத்தின் செயல்பாடு குறித்தும் கண்டறிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்கிரகத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வை இன்சைட் விண்கலன் ஆய்வு செய்து முதல் அதிர்வை பதிவு செய்துள்ளதாகவும் கலிபோர்னியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு

பூமிக்கு

இந்த நில அதிர்வு 2 அல்லது 2.5 ரிக்டர் அளவுகோலாக உள்ளது. செவ்வாய் கிரகத்தில் இது முதல்முறையாக ஏற்பட்டுள்ளது. இதன் சப்தத்தை விண்கலம் பதிவு செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

விரிவான தகவல்

விரிவான தகவல்

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் இந்த சிக்னலை கேட்க நீண்ட மாதங்களாக காத்திருந்தோம். செவ்வாய் கிரகத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதற்கு ஆதாரம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளோம். அவை குறித்து ஆராய்ச்சி செய்த பிறகு விரிவான தகவல்களை வெளியிடுகிறோம்.

மேல் ஓடு

மேல் ஓடு

சிறிவு நில அதிர்வு என்பதால் அதன் சப்தம் மிகவும் குறைவாக கேட்கிறது. அது 10 நிமிடங்களுக்கு நீடித்தது. இந்த அதிர்வு இந்த கிரகம் உருவான அதாவது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தொடங்கியிருக்கலாம். இதனால் செவ்வாய் கிரகத்தின் மேல் ஓடு பரப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
NASA's InSight Mars lander may have recorded its first 'Marsquake' - seismic tremors, faint but unmistakable deep in the belly of the red beast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X