வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்கள் பயணத்தின் மூலம் எங்களுக்கு ஊக்கமளித்துள்ளீர்கள்.. இஸ்ரோவுக்கு நாசா பாராட்டு

Google Oneindia Tamil News

வாஷிங்டன் : சந்திரயான் 2 திட்டத்திற்காக இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகளுக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.

சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த மாதம் விண்ணுக்கு அனுப்பியது. இது நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சியை மேற்கொள்ள அனுப்பப்பட்டது.

விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சி நேற்று அதிகாலை 1.30 மணிக்கு நடந்தது. அப்போது விக்ரம் லேண்டருடனான தொடர்பை இஸ்ரோ இழந்தது. இதனால் சந்திரயான் 2 எதிர்பார்த்தபடி நிலவில் இறங்கவில்லை.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்.. முதல் கட்ட தேர்வை நிறைவு செய்ய விமான படைமனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்.. முதல் கட்ட தேர்வை நிறைவு செய்ய விமான படை

இஸ்ரோ முயலும்

இஸ்ரோ முயலும்

எனினும் இந்த திட்டம் 95 சதவீதம் வெற்றி பெற்றதாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் 14 நாட்களுக்குள் லேண்டரின் தொடர்பை கண்டுபிடிக்க இஸ்ரோ முயலும் என கூறியுள்ளது.

நாசா ட்வீட்

நாசா ட்வீட்

இந்த திட்டம் குறித்து அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் விண்வெளி ஆய்வு என்பது கடினமானது. நிலவின் தென்பகுதியில் ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

சூரியனை ஆராய

இதன் மூலம் நீங்கள் எங்களுக்கு ஊக்கமளித்துள்ளீர்கள். எதிர்காலத்தில் சூரிய குடும்பத்தை ஆராயும் திட்டங்களில் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

இதை போல் இஸ்ரோவின் முயற்சிகளுக்கும் அர்ப்பணிப்புக்கும் ஆஸ்திரேலிய விண்வெளி ஆராய்ச்சி மையமும் பாராட்டு தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் நிலவுக்கு சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததை ஆஸ்திரேலியா சுட்டிக் காட்டியுள்ளது.

யூஏஇ வாழ்த்து

யூஏஇ வாழ்த்து

இஸ்ரோவின் ஆய்வுகள் தொடர வாழ்த்துகளை கூறியுள்ளது. மேலும் இஸ்ரோவின் முயற்சிக்கு ஐக்கிய அரபு அமீரகம் உறுதுணையாக இருக்கும் என அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையம் கூறியுள்ளது.

English summary
Nasa praises ISRO in its twitter that Space is hard. We commend @ISRO’s attempt to land their Chandrayaan2 mission on the Moon’s South Pole. You have inspired us with your journey and look forward to future opportunities to explore our solar system together.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X