வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிலவில் புள்ளிபோல் சீனாவின் சேஞ்ச் 5 விண்கலம்... நாசா படம் வெளியீடு!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நிலவின் மேற்பரப்பில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை சீனா விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் பாறை துகள்களை எடுத்து கொண்டு பூமிக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கிறது.

அந்த சேஞ்ச் 5 என்ற விண்கலம் நிலவில் இருக்கும் படத்தை நாசாவின் சந்திர மறுமதிப்பீட்டு ஆர்பிட்டர் படம் பிடித்து வெளியிட்டு உள்ளது. சீனாவின் சேஞ்ச் 5 விண்கலம் ஒரு சிறு புள்ளி போல் இருப்பதாக அந்த படம் வெளிக்காட்டி உள்ளது.

NASA released a picture of the chinas Change 5 spacecraft on the moon

அமெரிக்கா, ரஷியா நாடுகளை அடுத்து சீனாவும் நிலவின் மேற்பரப்பில் ஆராய்ச்சி செய்வதில் களம் இறங்கி உள்ளது.நிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை கடந்த மாத இறுதியில் சீனா விண்ணில் செலுத்தியது.லாங் மார்ச் 5 ராக்கெட் மூலம் நிலவுக்கு புறப்பட்ட சேஞ்ச் 5 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது. பின்னர் நிலவில் இருந்து பாறை துகள்களை சேகரித்து மீண்டும் பூமிக்கு வந்து கொண்டு இருக்கிறது.

வெற்றிகரமாக தரை இறங்கியது. பின்னர் நிலவில் இருந்து பாறை துகள்களை சேகரித்து மீண்டும் பூமிக்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சேஞ்ச் 5 விண்கலம் நிலவில் தரை இறங்கியதை நாசாவின் சந்திர மறுமதிப்பீட்டு ஆர்பிட்டர் படம் பிடித்துளளது. நாசா வெளியிட்ட படத்தில் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கி இருக்கும் சேஞ்ச் 5 விண்கலம் ஒரு சிறு புள்ளி போல் தெரிகிறது.

அமெரிக்காவுக்கு அடுத்து சாதனை. .. நிலவில் கொடி நாட்டிய சீனா! அமெரிக்காவுக்கு அடுத்து சாதனை. .. நிலவில் கொடி நாட்டிய சீனா!

நிலவில் மூன்று பள்ளங்களின் மையத்தில் சேஞ்ச் 5 விண்கலம் உள்ளதும் அந்த விண்கலத்தில் உள்ள தானியங்கி அமைப்புகள் விண்கலத்தின் ஆபத்துகளை தவிர்த்து பாதுகாப்பாக தரை இறங்குவதை காட்டுகிறது.சேஞ்ச் 5 விண்கலம் சேகரித்த மாதிரிகளுடன் பூமிக்கு புறப்படுவதற்கு முன்பு இந்த படங்கள் எடுக்கப்பட்டன. அந்த விண்கலம் டிசம்பர் 17ம் தேதி பூமியில் தரை இறங்கும் என தெரிகிறது.

English summary
NASA's Lunar Reassessment Orbiter has released a picture of the Change 5 spacecraft launched by China
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X