வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரீகனயசன்ஸ் ஆர்பிட்டராலும் விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை.. விஞ்ஞானிகள் கவலை

Google Oneindia Tamil News

Recommended Video

    லேண்டர் இயங்காவிட்டால் வேற வழி இருக்கு... விஞ்ஞானிகள் போட்ட மாஸ் திட்டம்

    வாஷிங்டன்: அமெரிக்காவின் லூனார் ரீகனயசன்ஸ் ஆர்பிட்டர் செயற்கைகோளாலும் இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை படம் பிடிக்க இயலவில்லை.

    4 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நிலவுக்கு சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம 22-ஆம் தேதி இஸ்ரோ அனுப்பியது. 40 நாட்கள் கழித்து சந்திரயான் 2 விண்கலத்தை சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டளைகளை பிறப்பித்தனர்.

    இந்த மாதம் முதல் வாரத்தில் ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது. இது வெற்றிக்கரமாக நிகழ்ந்தது. இந்த நிலையில் நிலவில் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு கடந்த 7-ஆம் தேதி அதிகாலை நிகழ்ந்தது. இந்த அற்புத நிகழ்வை காண இந்தியாவே தூங்காமல் விழித்திருந்தது.

    இரு ஆண்டுகளுக்கு பிறகு.. அதிக ஈரப்பதமான நாள் இன்று.. ஏன் எப்படி?இரு ஆண்டுகளுக்கு பிறகு.. அதிக ஈரப்பதமான நாள் இன்று.. ஏன் எப்படி?

    ஆர்பிட்டர் புகைப்படம்

    ஆர்பிட்டர் புகைப்படம்

    இந்த நிலையில் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதால் அங்கு என்ன நிகழ்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு தெரியவில்லை. இதையடுத்து நிலவின் வட்டபாதையில் சுற்றி வரும் ஆர்பிட்டரானது லேண்டர் நிலவில் தரையிறங்கியதையும் பக்கவாட்டில் விழுந்திருப்பதையும் புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளது.

    தீவிரம்

    தீவிரம்

    இதையடுத்து லேண்டருடனான தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாசா விஞ்ஞானிகளும் அப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்னும் 4 நாட்களுக்குள் நிலவில் இருள் சூழ்ந்துவிடும் என்பதால் லேண்டரை தேடும் முயற்சி தீவிரமடைந்துள்ளது.

    அமெரிக்காவின் ஆர்பிட்டர்

    அமெரிக்காவின் ஆர்பிட்டர்

    இந்த நிலையில் விக்ரம் லேண்டர் குறித்த புகைப்படங்களை அனுப்ப நாசாவின் லூனார் ரீகனயசன்ஸ் ஆர்பிட்டர் (எல்.ஆர்.ஓ.) களம் இறக்கி விடப்பட்டது. இந்த ஆர்பிட்டர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேல் வலம் வந்து அதை புகைப்படம் எடுக்குமாறு இயக்கப்பட்டது.

    கவலை

    கவலை

    நிலவில் இருள் நெருங்கி வருவதால் படம் எடுத்தாலும் அந்த அளவுக்கு தெளிவாக இருக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். எனினும் முயற்சித்து பார்த்தனர். ஆனால் அமெரிக்காவின் எல் ஆர் ஓ செயற்கைகோளால் படம் எடுக்கமுடியவில்லை. நாளை ஒரு நாள் மட்டுமே நிலவில் ஓரளவு வெளிச்சம் இருக்கும் என்பதால் அதை தொடர்பு கொள்ள முடியாதது குறித்து விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர். நாசாவின் ரீகனயசன்ஸ் ஆர்பிட்டர் கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Nasa's Lunar Reconnaissance Orbiter couldnot take images of Vikram Lander which was sent by ISRO.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X