வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாராவது இருக்கீங்களா?.. "ஹலோ விக்ரம்!".. லேண்டருக்கு மெசேஜ் அனுப்பிய நாசா!

Google Oneindia Tamil News

Recommended Video

    நாசா நினைத்தால் அது நடக்கும்.. ஆனால்.. சந்திரயான் 2ல் அடுத்து என்ன ?

    வாஷிங்டன்: விக்ரம் லேண்டருடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இஸ்ரோவுடன் இணைந்து நாசாவும் முயற்சித்து வருகிறது.

    நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரயான் -2 என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. அதில் இருந்த லேண்டர் வாகனம் விண்ணில் தரையிறங்குவது செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெற்றது.

    அப்போது சாப்ட் லேண்டிங் டெக்னாலஜி மூலம் தரையிறங்கவிருந்த நிலையில் லேண்டருக்கும் இஸ்ரோவுக்கும் இடையே இருந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இஸ்ரோ முயற்சி

    இஸ்ரோ முயற்சி

    இதையடுத்து 14 நாட்கள் மட்டுமே நிலவில் வெளிச்சம் இருக்கும் என்பதாலும் அடுத்த 14 நாட்கள் இருள் வந்துவிடும். பின்னர் வெப்பநிலையும் மைனஸ் 170 -க்கு சென்றுவிடும். எனவே 14 நாட்களுக்குள் அதனுடனான தொடர்பை பெற இஸ்ரோ முயற்சித்து வருகிறது.

    லேண்டர்

    லேண்டர்

    இந்த நிலையில் நிலவை சுற்றி வந்து கொண்டிருந்த ஆர்பிட்டர், லேண்டர் இருக்கும் இடத்தை புகைப்படமாக எடுத்து அனுப்பியது. இதில் நிலவில் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு 400 மீட்டர் உயரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விக்ரம் லேண்டர் தரையிறங்கிவிட்டது. ஆனால் சாய்ந்து கொண்டிருக்கிறது.

    விக்ரம் லேண்டர்

    விக்ரம் லேண்டர்

    அதை தட்டி எழுப்ப இஸ்ரோ முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரோவுக்கு உதவ நாசா முடிவு செய்துள்ளது. அதன்படி கலிஃபோர்னியா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா ஆகிய 3 இடங்களிலுள்ள ஆய்வு நிலையங்களிலிருந்து ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரம் லேண்டருக்கு ஹலோ என்ற மெசேஜை அனுப்பியுள்ளனர்.

    4 ஆண்டனாக்கள்

    4 ஆண்டனாக்கள்

    லேண்டருக்கு ஒரு சிக்னல் அனுப்பப்பட்டால் நிலவு ரேடியோ ரிஃப்லெக்டராக செயல்பட்டு ஒரு சிறிய பகுதியை சிக்னலாக பூமிக்கு அனுப்பும். இது 8 லட்சம் கிலோ மீட்டர் சுற்றுக்கு பிறகு அனுப்பும். மேற்கண்ட 3 ஆய்வு நிலையங்களும் பூமியிலிருந்து 120 டிகிரி தொலைவில் இருக்கின்றன.ஒவ்வொன்றிலும் 4 ஆண்டனாக்கள் உள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    English summary
    Nasa's sends Hello message to Vikram Lander as it was grounded on moon in tilt position.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X