வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாவ் சூப்பர்!.. சூரிய குடும்பத்தை கடந்து அண்டவெளிக்கு சென்ற நாசாவின் வாயேஜர் 2 விண்கலம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சூரிய குடும்பத்தை கடந்து அண்டவெளிக்கு சென்ற நாசாவின் வாயேஜர் 2 விண்கலம்! NASA's Voyager 2

    வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா அனுப்பிய வாயேஜர் 2 விண்கலம் சூரிய குடும்பத்தை தாண்டி இன்டர்ஸ்டெல்லர் எனப்படும் நட்சத்திரங்களுக்கிடையே உள்ள அண்ட பகுதிக்கு சென்றது. இதை விஞ்ஞானிகள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

    சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக 1977-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வாயேஜர் 2 என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. இது ஒரு ஆளில்லா விண்கலமாகும். இது 722 கிலோகிராம் எடை கொண்டது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பிய வாயேஜர் 1 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி 2012-ஆம் ஆண்டு சூரிய குடும்பத்தை தாண்டி இன்டர்ஸ்டெல்லர் பகுதிக்கு சென்றது.

    தூரம்

    தூரம்

    இதை செப்டம்பர் 12-ஆம் தேதி, 2013-இல் நாசா உறுதி செய்தது. இதன் மூலம் சூரியக் குடும்பத்தை விட்டு வெளியே சென்ற முதலாவது விண்கலம் என்ற சாதனையை இது படைத்தது. அதுபோல் பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்குச் சென்ற மனிதனால் உருவாக்கப்பட்டு அந்த தூரத்தை அடைந்த முதல் பொருள் ஆகும்.

    வாயேஜர் 1

    வாயேஜர் 1

    இன்டர்ஸ்டெல்லர் பகுதியை அடைய வாயேஜர் 1-க்கு 40 ஆண்டுகள், 10 மாதங்கள் 2 நாட்கள் தேவைப்பட்டது. அது போல் வாயேஜர் 2 விண்கலமும் நேற்றைய தினம் இன்டர்ஸ்டெல்லர் பகுதியை அடைந்தது. இதன் இலக்கை அடைந்த காலம் 42 ஆண்டுகள் 2 மாதங்கள் 17 நாட்கள் ஆகும்.

    வாயேஜர் 2

    வாயேஜர் 2

    வாயேஜர் 1-க்கு முன்னரே வாயேஜர் 2 அனுப்பப்பட்ட போதிலும் வாயேஜர் 1 வேகமாக பயணித்தது. சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களையும் மிக அருகில் சென்று ஆய்வு செய்த முதல் விண்கலம் இதுதான். இது பூமிக்கு தகவல்களை அனுப்ப 16 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.

    சூரியனின் தாக்கம்

    சூரியனின் தாக்கம்

    இப்போது இந்த விண்கலம் சூரியனின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகி இன்டர்ஸ்டெல்லர் நட்சத்திரங்களுக்கு இடையே அண்டவெளி பகுதிக்குச் சென்றுவிட்டது. இது கதிர் வீச்சு, நட்சத்திர தூசு, அணு, அயனிகள், மூலக்கூறு வடிவ வாயுக்கள் கொண்ட பகுதியாகும். இந்த விண்கலம் சூரியனின் தாக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும்.

    English summary
    Nasa's Voyager 2 spacecraft reaches intersteller space. It was sent to review Solar System's outer surface in the year 1977.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X