என்ன படத்துல வர்ற மாதிரியே நடக்குது.. பூமியை நோக்கி பாய்ந்து வரும் சிறு கோள்! நாசா எச்சரிக்கை!
வாஷிங்டன்: ஆபத்தான சிறுகோள் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாம் வாழும் இந்த கேலக்ஸி பல ஆச்சரியங்களைக் கொண்டது. நமது பூமியைப் போலவே இந்த பிரபஞ்சத்தில் பல கோள்கள் இருக்கும் என்றே நம்பப்படுகிறது.
ஷாக்! இந்தியாவில் ஒரே வாரத்தில் 40% அதிகரித்த கொரோனா.. அதுவும் இந்த 3 மாநிலங்கள்தான் டாப்!
இது தொடர்பான ஆய்வுகள் ஒருபுறம் நடந்து வருகிறது. அதேநேரம் ஒவ்வொரு நாளும் பிரபஞ்சம் பற்றி பல்வேறு தகவல்களை நாம் தெரிந்து வருகிறோம்.

நாசா
இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் ஸ்பான்சர் செய்யப்படும் வானியலாளர்கள் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். விமானம் அளவுள்ள மூன்று பெரிய ஆஸ்டிராய்டுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பூமியின் அருகே கடந்து சென்றது. இந்தச் சூழலில் வரும் நாட்களில் மற்றொரு ஆபத்தான ஆஸ்டிராய்டு பூமியைக் கடந்து செல்லலாம் என்று நாசா வானியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மிக அருகில்
கடந்த 1994ல் ஆஸ்திரேலியா விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட 1994 WR12 என்ற ஆஸ்டிராய்டு தான் வரும் நாட்களில் பூமியின் அருகே வருகிறது. இது கால்பந்து மைதானத்தை விட பெரியதாகவும், பூமியில் இருந்து ஒப்பீட்டளவில் குறைவான தூரத்தில், 20 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் பூமியை ஒட்டி செல்லும் என நாசா தெரிவித்துள்ளது. அதாவது இது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவைவிட ஐந்து மடங்கு அதிகமாகும்.

அரிய நிகழ்வு
இந்த ஆஸ்டிராய்டு அதன் பாதையில் ஒரு சிறிய அளவில் விலகினாலும் கூட டைனோசர்களைப் போல நம்மை வரலாறாக மாற்றிவிடக்கூடும் என நாசா எச்சரித்துள்ளது. வரும் 2046இல் மற்றொரு ஆஸ்டிராய்டு 1.01 மில்லியன் மைல்கள் வரை நெருங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். ஆனால், இவை பெரும்பாலும் பூமியின் மீது மோதுவதில்லை. இத்தகைய பிரமாண்ட ஆஸ்டிராய்டுகள் பூமியைத் தாக்குவது 6 லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அபூர்வ நிகழ்வாகும்.

ஆய்வாளர்கள்
இதுபோன்ற ஆஸ்டிராய்டுகளின் மூவ்மென்ட்டுகளை அமெரிக்கா உட்பட பல்வேறு உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது வரை பெரிய ஆஸ்டிராய்டுகள் பூமியின் மீது மோதும் ஆபத்து இல்லை என்றாலும் கூட வரும் காலத்தில் இந்த நிலை மாற வாய்ப்புள்ளதா என்பதைக் கண்டறிய ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இது குறித்தும் புதிதாக ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

புதிய கண்டுபிடிப்பு
அதாவது பூமியின் கிழக்கில் இருந்து இரவு நேரத்தில் நம்மை நோக்கி வரும் ஆஸ்டிராய்டுகள் நமது கிரகம் சுழலும் வேகம் மற்றும் சூரியனைச் சுற்றி வரும் வேகம் காரணமாக நிலையாக இருப்பதைப் போலத் தெரிவதாக கண்டுபிடித்துள்ளனர். அதாவது பூமியின் கிழக்கில் இருந்து இரவு நேரத்தில் ஆஸ்டிராய்டுகள் பூமியை நோக்கி வந்தாலும் கூட அவை நிலையாக இருப்பதைப் போலவே தெரிகிறது. இதுபோல வரும் காலத்தில் ஆஸ்டிராய்டுகள் வந்தால் அதை நம்மிடம் இருக்கும் அதிநவீன கருவிகளால் கூட கண்டறிய முடிவதில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.