வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செவ்வாய் கிரகத்திலிருந்து பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் நாசா!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: செவ்வாய்க் கிரகத்திலிருந்து பூமிக்கு பாறை மாதிரிகளை நாசா கொண்டு வரும் முயற்சியில் முதல் முறையாக ஈடுபடவுள்ளது. மார்ஸ் சேம்பிள்ஸ் ரிட்டர்ன் என்ற மிஷனுக்கு கீழ் நாசா இதை மேற்கொள்கிறது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து விண்வெளி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முன்னேறி செல்ல நாசா முயற்சித்து வருகிறது.

Nasa to bring Mars rock samples back to Earth

வேறு கிரகத்திலிருந்து மாதிரிகளை கொண்டு வருவதற்காக ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியுடன் செவ்வாய் கிரக மாதிரி சேகரிப்பு தனித்துவ ஆய்வு நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்த ஆய்வு நிறுவனம்தான் பாறை மாதிரிகளை கொண்டு வர நாசாவுக்கு அனுமதி அளித்தது.

செவ்வாய் கிரகத்திற்கு நாசாவால் கடந்த ஜூலையில் அனுப்பப்பட்ட பெர்சிவெரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைய இன்னும் பாதி தூரம் உள்ளது. ரோவரில் உள்ள டிரில்லரை கொண்டு மார்டியன் பாறைகள், மணலை சேகரிக்கும்.

Nasa to bring Mars rock samples back to Earth

மார்டியன் பகுதியில் உள்ள முக்கியமான பொருட்களை டியூப்களில் ரோவர் சேகரிக்கும். இந்த முழு செயல்முறைக்கு பெயர் சேம்பிள் கேக்கிங். இதன் மூலம் செவ்வாய் கிரகம் பற்றிய மர்மங்கள் விலகும் என தெரிகிறது. இந்த சேம்பிள்களை கொண்டு அந்த கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்வார்கள்.

ரோவரில் உள்ள சாம்பிள்கள் மார்ஸை சுற்றிக் கொண்டிருக்கும் ஆர்பிட்டரில் சேகரிக்கப்பட்டு அவை பாதுகாப்பாக வரும் 2030ஆம் ஆண்டில் பூமியை வந்தடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

English summary
Nasa to bring Mars rock samples back to Earth first time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X