வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பூமியை நெருங்கும் விண்கல்.. எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை விட பெரியது.. விழுந்தால் பெரும் சேதம்தான்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை விட பெரிய விண்கல் ஒன்று அடுத்த வாரத்தில் பூமிக்கு அருகே கடந்து செல்லவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விண்வெளியில் ஏராளமான, அதாவது பல லட்சக்கணக்கில் விண்கற்கள் இருக்கின்றன. அவை புவியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு கீழே விழும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகிறது. இது போல் விழும் கற்கள் அளவில் சிறியதாக இருக்கும் பட்சத்தில் பிரச்சினை இல்லை.

Nasa warns that devastating Empire State Building sized asteriod close to Earth

பெரியதாக இருந்தால் மட்டுமே மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில் 1,870 அடி விட்டத்தைக் கொண்ட 2006 கியூகியூ 33 (QQ23) என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் ஒன்று ஆகஸ்ட் 10-ஆம் தேதி பூமிக்கு அருகே கடந்து செல்கிறது.

தற்போது பூமியிலிருந்து சுமார் 7 லட்சம் கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஆனால் அந்த விண்கல்லால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த கியூ கியூ 23 விண்கல்லானது எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை காட்டிலும் 400 அடி பெரியது. இது போன்ற பெரிய விண்கல் பூமியில் மோதும்போது பெரிய பேரழிவை கொடுக்கும் என கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த நகரமே அழிந்து ஏராளமான உயிர் பலியை கொடுக்கும். ஒரு வேளை கடலில் விழுந்துவிட்டால் பெரிய சுனாமிகளை ஏற்படுத்தலாம் என தெரிகிறது.

English summary
Nasa warns that devastating Empire State Building sized asteriod close to Earth which is 400 feet taller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X