வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. இந்த விஷயத்துல மோடிக்கே அண்ணன் போலயே இந்த ட்ரம்ப்.. ஓட்டும் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதிதான் நிலவு என கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார், அமெரிக்க அதிபர், டொனால்ட் ட்ரம்ப்.

லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, பிரதமர் நரேந்திர மோடி அளித்த ஒரு பேட்டியை போலவே ட்ரம்ப் கருத்தும் சர்ச்சையையும், கேலி, கிண்டலையும் உருவாக்கியுள்ளது.

பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை தகர்க்க இந்திய போர் விமானங்களை அனுப்பியபோது, மேகமூட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுமாறு, தான் அறிவுரை கூறியதாக, மோடி தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த பேட்டியை நெட்டிசன்கள் ஓட்டித் தள்ளிவிட்டனர்.

மீண்டும் பிரதமரான பிறகு முதல் வெளிநாட்டு பயணம்.. மாலத்தீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு மீண்டும் பிரதமரான பிறகு முதல் வெளிநாட்டு பயணம்.. மாலத்தீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

டொனால்ட் ட்ரம்ப்

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு, வெளியிட்ட ஒரு ட்வீட்டில், சர்ச்சைககுரிய கருத்தை கூறியுள்ளார். ட்ரம்ப் வெளியிட்ட ட்வீட்டில், நாம் செலவழிக்கின்ற அனைத்து பணத்திற்கும், நாசா சந்திரனுக்கு செல்வது பற்றி பேசக்கூடாது - 50 ஆண்டுகளுக்கு முன்பே நாம் அதை செய்துவிட்டோம். அவர்கள், மிகப்பெரிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். செவ்வாய் (அதில் சந்திரன் ஒரு பகுதியாகும்), உள்ளிட்டவை, பாதுகாப்பு மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

செவ்வாயின் பகுதி நிலவு

இதைத்தான் நெட்டிசன்கள் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். 2019ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி முதல், செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதியாக, நிலவு மாறிவிட்டது என முட்டை முழியுடன் ஓட்டுகிறார் இந்த நெட்டிசன்.

இப்படித்தான் இருக்கும்

நிலவு-செவ்வாய் கிரகம் இணைந்தால் இப்படித்தான் இருக்கும் என கிண்டல் செய்கிறார் இந்த நெட்டிசன். அது என்ன கோலி குண்டுகளாப்பா. இப்படி இருக்க?

சுவர் கட்டலாம்

மெக்சிகோ எல்லையில் ரூ.7 ஆயிரம் கோடி செலவில் சுவர் கட்டும் பணியை துவங்க ட்ரம்ப், அனுமதி வழங்கியுள்ளார். இதையும் சேர்த்தே கிண்டல் செய்யும்வகையில், நிலவு மற்றும் செவ்வாய் நடுவே சுவர் கட்டலாம் என சொல்கிறார் இந்த நெட்டிசன்.

தகுதியில்லை

இந்த நாட்டை ஆளும் தகுதி உங்களுக்கு இல்லை, அல்லது சோலார் சிஸ்டம் குறித்து குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லவும் உங்களுக்கு தகுதி இல்லை என சொல்லலாம். இவ்வாறு கூறுகிறார் இந்த நெட்டிசன்.

English summary
Netizen trolls Donald Trump for his tweet on Mars and Moon, here you can find.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X