வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாய், பூனைகளிடம் கொரோனா வைரஸ் மாறுபாடு காணப்படுகிறதா?.. ஆய்வில் பரபர தகவல்.. முழு விவரம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி கொண்டிருக்கும் வேளையில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரசால் உலக நாடுகள் பீதியில் உறைந்துள்ளன.

இந்த உருமாறிய வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பே கூறியுள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் டெல்டா வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. என்னால் 10 பேர் இன்ஸ்பயர் ஆனால் போதும்.. குஷ்பு ட்வீட் எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. என்னால் 10 பேர் இன்ஸ்பயர் ஆனால் போதும்.. குஷ்பு ட்வீட்

புதிய கொரோனா மாறுபாடு

புதிய கொரோனா மாறுபாடு

இந்தியா உள்ளிட்ட 38 நாடுகளுக்கு இந்த ஓமிக்ரான் வைரஸ் பரவி விட்டது. புதிய வைரஸ் தங்கள் நாடுகளை கட்டுப்பாடுகளை வைத்திருக்க கூடாது என்பதற்காக பல நாடுகளும் பரபரப்பாக இயங்கி வருகிறது. நிலைமை இப்படி இருக்க மனிதர்களின் வாழ்வோடு பின்னிபிணைந்து விட்ட நாய்கள், பூனைகளிடம் இருந்து புதிய கொரோனா மாறுபாடு உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆய்வில் பரபர தகவல்

ஆய்வில் பரபர தகவல்

ஏற்கனவே மனிதர்கள் மட்டுமின்றி சிங்கங்கள் மட்டுமின்றி வீடுகளில் வளர்க்கும் விலங்குகள், மிருக காட்சி சாலைகளில் வளர்க்கப்படும் விலங்குகளில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனிதர்களிடமிருந்து விலங்குகள் குறிப்பாக நாய், பூனைகள் வைரஸால் பாதிக்கப்பட்டால், புதிய கொரோனா மாறுபாடுகள் உருவாக வாய்ப்புள்ளது என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

பிறழ்வு வகைகள்

பிறழ்வு வகைகள்

இது தொடர்பாக தேசிய அறிவியல் அகாடமியின் அதிகாரப்பூர்வமான 'PNAS' இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, பல காட்டு விலங்குகள், மிருகக்காட்சிசாலை விலங்குகள் மற்றும் வீட்டு விலங்குகளில் பதிவாகியுள்ள கொரோனா பாதிப்புகள் உருமாறிய மாறுபாட்டுடன் பரவலை கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதற்காக கால்நடை மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவ அறிவியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் பூனைகள், நாய்கள், வெள்ளெலிகள் மற்றும் ஃபெர்ரெட்டுகள் உள்ளிட்ட வைரஸில் ஏற்பட்ட பிறழ்வு வகைகளை ஆய்வு செய்துள்ளது.

குறிப்பிடதக்க வைரஸ்

குறிப்பிடதக்க வைரஸ்

''விலங்குகளில் குறிப்பிடதக்க வைரஸ் பிறழ்வுகள் இருந்தாலும் பொதுவாக பல வகையான வைரஸ்கள் மற்ற வகை விலங்குகளைப் பாதிக்காது. அவை மிகவும் குறிப்பிட்டதாக உருவானது'' என்று நுண்ணுயிரியல், நோயெதிர்ப்பு மற்றும் நோயியல் துறையின் முதல் ஆசிரியர்களில் ஒருவரும் முனைவர் பட்டம் பெற்ற மாணவியுமான லாரா பஷோர் கூறியுள்ளார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளரும், வனவிலங்கு நோய் சூழலியல் உதவி பேராசிரியருமான எரிக் காக்னே கூறுகையில், "மனிதர்கள் பலவிதமான விலங்குகளை தங்களுடன் பழக்கி வருகின்றனர். இதனால் வைரஸ் பல்வேறு வகையான உயிரினங்களை தாக்கும் வாய்ப்பு உருவானது' என்று கூறியுள்ளார்.

English summary
A study has found that new corona variants are more likely to develop from humans to animals, especially dogs and cats, when infected with the virus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X