வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கர்களாக ஒன்றிணைவோம்.. கன்னிப்பேச்சில் உணர்ச்சிவசப்பட்ட பிடன்.. வரலாற்று சிறப்புமிக்க உரை!

Google Oneindia Tamil News

வாஷிங்க்டன் : அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக நான் இருப்பேன், அமெரிக்கர்கள் அனைவரும் வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அதிபர் பிடன் தனது முதல் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    அமெரிக்காவின் 46வது அதிபரானார் ஜோ பைடன்... துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்பு!

    அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பதவி ஏற்றுள்ளார். பிடனுடன் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்றுள்ளார்.

    வாஷிங்க்டன் டிசியில் உள்ள கேப்பிட்டல் கட்டிடம் முன் நடந்த பதவி ஏற்பு விழாவில் பிடன் இன்று பதவி ஏற்றார். இதையடுத்து பிடன் மிகவும் உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தினார்.

    துளசேந்திரபுரத்தில் வெடித்து சிதறிய பட்டாசு.. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரான 'தமிழச்சி' கமலா துளசேந்திரபுரத்தில் வெடித்து சிதறிய பட்டாசு.. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரான 'தமிழச்சி' கமலா

    பிடன்

    பிடன்

    அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிடன் தனது முதல் உரையில், அமெரிக்கர்களாகிய நாம் ஒன்றிணைந்து அனைத்து தீவிரவாதங்களையும் முறியடிக்க வேண்டும். நமது வரலாறு போராட்டங்கள், சவால்களை எதிர்கொண்டவை. உலக யுத்தம், பொருளாதார சரிவு என அத்தனையில் இருந்தும் மீண்டிருக்கிறது அமெரிக்கா.

    பேச்சு

    பேச்சு

    அமெரிக்காவின் ஆகப்பெரும் பலமே ஒற்றுமை- ஒற்றுமையால்தான் வளர்ச்சி சாத்தியம். அதை மீண்டும் அமெரிக்க சாதிக்கும். வாக்குரிமைக்கு பெண்கள் போராடிய அமெரிக்காவில்தான் இப்போது முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளார்.

    அமெரிக்கா உறுதி

    அமெரிக்கா உறுதி

    அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக நான் இருப்பேன் என உறுதி அளிக்கிறேன். யாரிடமும் நான் வேறுபாடு காட்ட மாட்டேன். அமெரிக்கர்களிடையே மாற்று கருத்துகளால் பிளவுகள் ஏற்பட்டுவிடக் கூடாது. அமெரிக்க மக்கள் வெறுப்பை விடுத்து அன்பை விதைக்க வேண்டும். சக மக்களை சக உயிர்களாக பார்க்க வேண்டும்.

    அன்பு

    அன்பு

    எப்போதையும் விட இப்போதுதான் நாம் நட்பாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா என்னும் பெருந்தொற்றை நாம் ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும். இந்த தோற்று நம்மை ஒன்றாக இணைந்துள்ளது. வேலைவாய்ப்பு உள்ளிட்ட அமெரிக்கர்களின் அச்சம் நீக்கப்படும்.

     உண்மைகள் வெல்லும்

    உண்மைகள் வெல்லும்

    பொய்கள் வீழ்த்தப்பட்டு உண்மைகள் வெல்ல வேண்டும். அரசியல் வேறுபாடுகளை களைந்து ஒற்றை அமெரிக்கா தேசமாக ஒருங்கிணைந்து நிற்போம்.நாம் சவால்களை ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும். இனி அமெரிக்காவிற்கு கடினமான காலம் இருக்காது என்று ஜோ பைடன் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    New President Biden talks for love and compassion on his first speech during inaugural today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X