வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகம் முழுக்க எதிரொலித்த ஒரே பெயர்.. டாப் நியூஸ் மேக்கர் ஜோ பிடன்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அரை நூற்றாண்டாக, அமெரிக்க அரசியலோடு பின்னி பிணைந்துள்ள ஜோ பிடன், இப்போது நியூஸ் மேக்கர் என்ற அந்தஸ்துக்கு முதல் முறையாக உயர்ந்துவிட்டார் என்று அடித்துச் சொல்ல முடியும்.

செனட் உறுப்பினர், துணை அதிபர் என பல துறைகளில் கோலோச்சிய ஜோ பிடன், அமெரிக்க அதிபர் தேர்தலில், பலம் பொருந்திய வேட்பாளராக அறியப்பட்ட டிரம்ப்பை வீழ்த்தி வெற்றிவாகை சூடிவிட்டார்.

Newsmaker: Joe Biden finally wins top prize in US politics

ஜனவரி 20ம் தேதி, வெள்ளை மாளிகையில் அதிகாரப்பூர்வமாக ஜோ பிடன் அதிபராக குடியேறும்போது அவருக்கு வயது 78ஆக இருக்கும். அமெரிக்க வரலாற்றிலேயே வயது முதிர்ந்த அதிபர் ஜோ பிடன்தான் என்பதால் உலகமே உற்று நோக்குகிறது.

தல்வாரே பகுதியைச் சேர்ந்த ஜோ பிடன், டிரம்ப் அதிகாரத்தில் நிலவிய குழப்பங்களுக்கு முடிவு கட்டப்போவதாகவும், கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்து, தன்னை ஒரு தேவ தூதன் போல தேர்தல் பிரச்சாரத்தில் முன்னிறுத்தினார். அதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.

1972ம் ஆண்டு, 29 வயதில் செனட்டுக்கு தேர்வானவர், ஜோ பிடன். 36 வருடங்கள் செனட் உறுப்பினராக இருந்து அனுபவத்தை சட்டைப் பையில் போட்டுக் கொண்டவர். 2009 முதல் 2017 வரை, ஒபாமா ஆட்சி காலத்தில் துணை அதிபராக இருந்தவர். இப்போது அவர் நியூஸ் மேக்கராக மாறியுள்ளார்.

2020ம் ஆண்டின் இறுதிவாக்கில் மட்டும் அவர் உலக அளவில் நியூஸ் மேக்கராகவில்லை.. அடுத்த ஆண்டு முதல், 4 வருடங்களுக்கு அமெரிக்க அதிபராக ஜோ பிடன் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவரை நியூஸ் மேக்கராகவே வைத்திருக்கப் போகிறது.

English summary
Joe Biden, a fixture in U.S. politics for a half century as a senator and vice president, completed a long climb to the political summit that included two previous failed presidential bids by defeating President Donald Trump.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X