வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.. அமெரிக்காவிலும் அதேதான்.. இந்தக் கூத்தைப் பாருங்க!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதால் நிகழ்ந்த வெளிச்சத்தை பார்த்தவர்கள் வானத்தில் தீப்பிடித்து விட்டதாக கருதினர்.

நியூயார்க் நகரத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு 9.20 மணிக்கு வானம் பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. அப்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் தெருக்களில் கூடிவிட்டனர்.

Newyork Sky turns into peacock green after transformer explosion

இதை வீடியோவாக எடுத்து அப்பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பினர். இதை நேரில் பார்த்தவர்கள் ஏலியன்கள் பூமிக்கு வந்து விட்டதாக ஒரு புரளியை கிளப்பிவிட்டனர்.

இதன் பின்னர் விசாரணையில் நியூயார்க் சிட்டியில் ஒரு அணு மின் நிலையத்தில் இரு டிரான்ஸ்பார்மர்கள் திடீரென வெடித்து சிதறியதால் வானம் பச்சை நிறத்தில் காட்சியளித்தது என தெரியவந்ததை அடுத்து மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

English summary
A transformer explosion at a New York City power plant turned the night sky an eerie blue hue for several minutes - partially shutting down nearby LaGuardia Airport and sending social media into a frenzy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X